Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

COVID-19: வியட்நாமில் தற்காலிக மருத்துவமனையை அமைக்கும் அதிகாரிகள்

 COVID-19: வியட்நாமில் தற்காலிக மருத்துவமனையை அமைக்கும் அதிகாரிகள்

வாசிப்புநேரம் -
COVID-19: வியட்நாமில் தற்காலிக மருத்துவமனையை அமைக்கும் அதிகாரிகள்

(கோப்புப் படம்: AFP / MARCO LONGARI)

வியட்நாமில் கிருமித்தொற்றால் மேலும் ஒருவர் மாண்டார்.

68 வயதான அந்த மாது டா நாங் நகரைச் சேர்ந்தவர்.

அவரையும் சேர்த்து மாண்டோர் எண்ணிக்கை மூன்றாக உயர்ந்துள்ளது.

இதற்கிடையே, அதிகாரிகள் ஆயிரம் படுக்கைகளைக் கொண்ட தற்காலிக மருத்துவமனையை அமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

அது சுகாதார அமைப்பின் சுமையைக் குறைக்கும் என்று கூறப்படுகிறது.

டா நாங் நகரின் 4 மருத்துவமனைகள் கிருமிப்பரவல் காரணமாக முடக்கப்பட்டுள்ளன.

வியட்நாமியத் தலைநகர் ஹனோயில் பெரிய அளவிலான கூட்டங்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

உணவகங்களிலும் பேரங்காடிகளிலும் பாதுகாப்பு இடைவெளியை உறுதிசெய்யும் நடவடிக்கைகள் நடப்பில் உள்ளன.

டா நாங் நகரில் இன்று மேலும் 12 பேருக்குக் கிருமித்தொற்று உறுதியானதாய் அந்நாட்டுச் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

பல மாதங்களாகக் கிருமிப்பரவலைக் கட்டுக்குள் வைத்திருந்த வியட்நாமில், மொத்தம் 558 கிருமித்தொற்றுச் சம்பவங்கள் தற்போது பதிவாகியுள்ளன. 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்