Images
  • vietnam
    AFP

பிரிட்டனில் குளிரூட்டப்பட்ட லாரியில் 39 குடியேறிகள் மாண்டுகிடந்த சம்பவம் - வியட்நாமில் நால்வருக்குச் சிறைத்தண்டனை

பிரிட்டனில் சென்ற ஆண்டு குளிரூட்டப்பட்ட லாரியில் 39 குடியேறிகள் மாண்டுகிடந்த சம்பவத்தின் தொடர்பில் வியட்நாமில் நால்வருக்குச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

சட்டவிரோதக் குடியேற்றத்துக்கு ஏற்பாடு செய்தது தொடர்பில்,அவர்களுக்கு இரண்டரை ஆண்டு முதல் ஏழரை ஆண்டு வரையிலான சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

சென்ற ஆண்டு அக்டோபரில் வியட்நாமைச் சேர்ந்த 31ஆடவர்களும், 8 பெண்களும், லண்டனுக்கு அருகில் லாரியில் மாண்டுகிடக்கக் காணப்பட்டனர்.

அனைத்துலகக் கவனத்தை ஈர்த்த அந்தச் சம்பவம் தொடர்பில் பிரிட்டன், பிரான்ஸ், பெல்ஜியம் ஆகிய நாடுகளிலும் பலர் கைதுசெய்யப்பட்டனர்.

Top