Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

ராணுவத்தளத்தில் நிலச்சரிவு - ராணுவ வீரர்கள் 10 பேர் மரணம்

வியட்நாமின் மத்திய வட்டாரத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில், ராணுவ வீரர்கள் 22 பேர் புதையுண்டதாக அஞ்சப்படுகிறது.

வாசிப்புநேரம் -

வியட்நாமின் மத்திய வட்டாரத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில், ராணுவ வீரர்கள் 22 பேர் புதையுண்டதாக அஞ்சப்படுகிறது.

அவர்களில் ராணுவ வீரர்கள் 10 பேர் மாண்டதாகவும் 12 பேர் காணாமற்போனதாகவும் வியட்நாமிய அரசாங்கம் தெரிவித்துள்ளது.

பின்னிரவு 2 மணியிலிருந்து சுமார் 5 நிலச்சரிவுகள் ஏற்பட்டன.

இம்மாதத் தொடக்கத்திலிருந்தே வியட்நாமின் மத்திய வட்டாரத்தைப் புரட்டிப் போட்டுள்ளது கனத்த மழை.

ஆறுகளில் 20 ஆண்டு காணாத பெருவெள்ளம்.

குவாங் ட்ரை வட்டாரத்தில் (Quang Try) ஏற்பட்ட நிலச் சரிவில் ராணுவ வீரர்கள் தங்குமிடம் பாதிக்கப்பட்டதாக
வியட்நாமிய அரசாங்க இணையத் தளம் தெரிவித்தது.

8 வீரர்கள் அங்கிருந்து தப்பித்ததாக Washington Post நாளேடு தெரிவித்தது.

சம்பவ இடத்தில் சுமார் 100 பேர் தேடல் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

சில நாள்களுக்கு முன்னர் பக்கத்தில் உள்ள பகுதியில் துவா தியென் ஹுவே (Thua Thien Hue) பகுதியில் நிலச்சரிவால் 13 பேர் மாண்டனர்; அவர்களில் பெரும்பாலோர் ராணுவத்தினர்.

போர் இல்லாத நேரத்தில், அதிக எண்ணிக்கையில் ராணுவத்தினரை இழந்தது வருத்தமளிப்பதாக வியட்நாமிய அரசாங்கம் Facebookஇல் குறிப்பிட்டுள்ளது. 

புதன்கிழமை வரை கனத்த மழை தொடரும். 600 மில்லிமீட்டர் வரை மழை பெய்யலாம் என்று முன்னுரைக்கப்பட்டுள்ளது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்