Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

COVID-19: வியட்நாமில் அவசரப் பயன்பாட்டிற்கு Pfizer-BioNTech தடுப்புமருந்துக்கு ஒப்புதல்

COVID-19: வியட்நாமில் அவசரப் பயன்பாட்டிற்கு Pfizer-BioNTech தடுப்புமருந்துக்கு ஒப்புதல்

வாசிப்புநேரம் -

வியட்நாமில் அவசரப் பயன்பாட்டிற்கு Pfizer-BioNTech-இன் COVID-19 தடுப்புமருந்துக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

வியட்நாமில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ள நான்காவது COVID-19 தடுப்புமருந்து அது.

இதற்கு முன்னர் அங்கு AstraZeneca, Sputnik V, Sinopharm தடுப்புமருந்துகளுக்கு அனுமதி கிடைத்தது.

அடுத்த காலாண்டில் சுமார் 31 மில்லியன் முறை பயன்படுத்தத் தேவையான Pfizer-BioNTech தடுப்புமருந்தைக் கொள்முதல் செய்ய வியட்நாம் திட்டமிட்டுள்ளது.

நோய்த்தொற்றுச் சம்பவங்களைக் கட்டுக்குள் கொண்டுவரக் கூடுதல் தடுப்பூசிகளை வாங்குவதற்கு வியட்நாம் முயன்று வருகிறது.

98 மில்லியன் மக்கள் வாழும் வியட்நாமில் 10,241 பேருக்கு நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளது, 58 பேர் மாண்டனர்.

கடந்த மார்ச் மாதம் அங்கு தடுப்பூசி போடும் பணி தொடங்கியது.

இதுவரை சுமார் 1.4 மில்லியன் பேருக்கு COVID-19 தடுப்பூசி போடப்பட்டுள்ளதாகத் தரவுகள் கூறுகின்றன.

-Reuters 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்