Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

வியட்நாம்: கிருமித்தொற்றால் முதல் மரணம்

வியட்நாமில், 70 வயது ஆடவர் ஒருவர் COVID-19 நோயால் மாண்டது உறுதி செய்யப்பட்டுள்ளது. 

வாசிப்புநேரம் -
வியட்நாம்: கிருமித்தொற்றால் முதல் மரணம்

படம்: Reuters/Kham

வியட்நாமில், 70 வயது ஆடவர் ஒருவர் COVID-19 நோயால் மாண்டது உறுதி செய்யப்பட்டுள்ளது.

அது, கிருமித்தொற்றால் அங்கு பதிவான முதல் மரணம்.

அதிக மக்கள்தொகை கொண்ட நாடுகளில் ஒன்றான வியட்நாம், இதுவரை கிருமித்தொற்றுக்கு ஒருவரைக் கூட பலி கொடுக்காத நாடு என்ற பெருமையைத் தக்கவைத்திருந்தது.

100 நாள்களுக்குப் பிறகு கடந்த வாரம் அங்கே, COVID-19 நோய் மீண்டும் அடையாளம் காணப்பட்டது.

புதிதாகப் பதிவான 45 கிருமித்தொற்றுச் சம்பவங்கள் டானான்ங் (Danang) நகருடன் தொடர்புடையவை.

அந்த நோயாளிகள் 27 வயதுக்கும் 87 வயதுக்கும் இடைப்பட்டவர்கள்.

அவர்கள் டானான்ங் நகரில் உள்ள 4 மருத்துவமனைகள், ஒரு ஹோட்டல் ஆகியவற்றுடன் தொடர்புடையவர்கள்.

டானான்ங் நகரப் பரவலையும் சேர்த்து வியட்நாமில் இதுவரை கிருமித்தொற்றுக்கு ஆளானவர்களின் மொத்த எண்ணிக்கை 509.

வியட்நாம் தலைநகர் ஹனோயில் ஒன்றுகூடல்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

கிருமித்தொற்றுக்கு எதிரான சோதனைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.


 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்