Images
  • swine flu (1)
    (கோப்புப் படம்: AFP)

வியட்நாமில் வேகமாகப் பரவும் ஆப்பிரிக்கப் பன்றிக் காய்ச்சல்; இவ்வாண்டு 230,000 பன்றிகள் கொல்லப்பட்டன

வியட்நாமில் ஆப்பிரிக்கப் பன்றிக்காய்ச்சல் பரவிக்கொண்டிருக்கிறது.

அதன் காரணமாக வியட்நாமியப் பண்ணைகள் பெரிய அளவில் பாதிப்படைந்துள்ளன. பன்றிக்காய்ச்சலால் அந்நாட்டில் இவ்வாண்டு மட்டும் இதுவரை 230,000 பன்றிகள் கொல்லப்பட்டன.

சென்ற ஆண்டு கொல்லப்பட்டதைப் போல் இவ்வாண்டில் மூன்று மடங்கு பன்றிகள் கொல்லப்பட்டதாக வியட்நாமிய அரசாங்கம் தெரிவித்தது.

பன்றிக்காய்ச்சல் பரவல் மிகச் சிக்கலான பிரச்சினையாக உருமாறிக்கொண்டிருப்பதாக அது சொன்னது. இந்நிலை தொடர்ந்தால் பரவல் மேலும் பெரிதாகும் ஆபத்து உள்ளதென்று கூறப்பட்டது.

இவ்வாண்டு மட்டும், ஆப்பிரிக்கப் பன்றிக்காய்ச்சல் வியட்நாமிலுள்ள 2,275 பகுதிகளில் உள்ள பன்றிகளுக்குப் பரவியுள்ளது.

அந்நாட்டின் 63 நகரங்களிலும் மாநிலங்களிலும் மொத்தம் 57 இடங்கள் பாதிப்படைந்துள்ளன.

ஆப்பிரிக்கப் பன்றிக்காய்ச்சல் மனிதர்களுக்கு ஆபத்து விளைவிக்காது, ஆனால் அது பன்றிகளின் உயிருக்கு ஆபத்து விளைவிக்கக்கூடியது.

ஆப்பிரிக்காவில் முதன்முதலில் பரவிய அந்த நோய், ஐரோப்பாவுக்குப் பரவி, பின் ஆசியாவுக்குப் பரவியுள்ளது.

அந்த நோயால் உலகெங்கிலும் மில்லியன் கணக்கான பன்றிகள் மாண்டன.

-Reuters 

Top