Images
  • swine flu
    படம்: AFP / HOANG DINH Nam

பன்றிக் காய்ச்சலுக்கு எதிரான போராட்டத்தில் இறங்கவிருக்கும் வியட்நாம் ராணுவம்

(வாசிப்பு நேரம்: 1 நிமிடத்திற்குள்)

'ஆப்பிரிக்கப் பன்றிக் காய்ச்சலுக்கு' எதிரான போராட்டத்தில் வியட்நாம் அதன் ராணுவத்தையும் காவல் துறையினரையும் களமிறக்கவுள்ளது.

வியட்நாமில் பன்றிக் காய்ச்சல் பரவல் பிப்ரவரி மாதம் கண்டுபிடிக்கப்பட்டது. 29 மாநிலங்களில் உள்ள பண்ணைகள் பாதிக்கப்பட்டன. காய்ச்சலைக் கட்டுப்படுத்த பாதிக்கப்பட்டுள்ள1.2 மில்லியன் பன்றிகளை அதிகாரிகள் கொன்றனர்.

காய்ச்சல் பரவுவதைத் தடுக்க நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள பன்றிகள் உடனடியாகக் கொல்லப்படவேண்டும். அந்த முயற்சியில் ராணுவப் படையினரும் காவல்துறையினரும் ஈடுபடுத்தப்படுவர் என்று அந்நாட்டின் Tien Phong நாளேடு தெரிவித்தது.

நோய்ப்பரவலை முறையாகக் கட்டுப்படுத்தத் தவறும் நிறுவனங்கள் மீது காவல்துறை விசாரணை மேற்கொள்ளும் என்றும் நாளேடு குறிப்பிட்டது.


Top