Images
  • vietnam covid
    (படம்: AP/Hau Dinh)

வியட்நாமுக்கு மேலும் தடுப்புமருந்தை நன்கொடையாக வழங்க அமெரிக்கா பரிசீலனை

அமெரிக்கா, வியட்நாமிற்கு மேலும் தடுப்புமருந்தை நன்கொடையாக வழங்குவது குறித்துப் பரிசீலனை செய்கிறது.

வியட்நாமில் அதிகளவில் டெல்ட்டா வகைக் கொரோனா கிருமி பரவி வரும் வேளையில் அந்நாட்டுக்கு உதவ முற்படுகிறது அமெரிக்கா.

அமெரிக்கா இன்று வியட்நாமிற்கு 3 மில்லியன் முறை போடத்தக்க Moderna தடுப்பூசிகளை விநியோகம் செய்துள்ளது. அனைத்துலக COVAX தடுப்பூசித் திட்டத்தின் கீழ், அமெரிக்கா இதுவரை 5 மில்லியன் தடுப்பூசிகளை வழங்கியுள்ளது.

கிருமிப்பரவல் தொடங்கியதிலிருந்து ஒரராண்டு காலமாக அதனைக் கட்டுக்குள் வைத்திருந்தது வியட்நாம். இருப்பினும், இவ்வாண்டு ஏப்ரல் மாதத்திலிருந்து, அந்நாட்டில் கிருமிப்பரவல் கடுமையாகி வருவதாகக் கூறப்பட்டது.

அங்கு நேற்று ஒரே நாளில் 7,968 பேரிடம் கிருமித்தொற்று அடையாளம் காணப்பட்டது.

அங்கு மொத்தம் 95,000 பேர் கிருமித்தொற்றால் பாதிப்படைந்துள்ளனர்; மாண்டோர் எண்ணிக்கை 370ஐ எட்டியது.

-Reuters 

Top