Images
  • Vietnam Woman
    (படம்: AFP / MOHD RASFAN)

கிம் ஜோங் நாம் கொலை வழக்கு: வியட்நாமிய மாது மீதான விசாரணை தொடரும்

வட கொரியத் தலைவர் கிம் ஜோங் உன்னின் ஒன்றுவிட்ட சகோதரர் கிம் ஜோங் நாம் கொலையுண்ட வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள வியட்நாமிய மாது, தோன் தி ஹுவாங்கின் (Doan Thi Huong) விசாரணை தொடரும் என்று மலேசிய நீதிமன்றம் அறிவித்துள்ளது.

இன்று அவர் உடலளவிலும், மனத்தளவிலும் திடமாக இல்லை என்பதால், வழக்கு விசாரணை, அடுத்த மாதம் முதல் தேதி வரை ஒத்திவைக்கப்படும் என்று நீதிபதி தெரிவித்தார்.

முன்னதாக, அவர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை மீட்டுக்கொள்ளும்படி, வியட்நாமிய அரசாங்கம், மலேசியாவைக் கேட்டுக்கொண்டது.

ஆனால், மலேசியாவின் அரசுத் தரப்பு வழக்குரைஞர்கள் அந்த வேண்டுகோளை நிராகரித்துவிட்டனர்.  

Top