Images
  • vietnam
    (படம்: Reuters)

வியட்நாமில் 35 நாள்களுக்குப் பிறகு சமூக அளவில் நோய்த்தொற்று

வியட்நாமில் 35 நாள்களுக்குப் பிறகு சமூக அளவில் COVID-19 நோய்த்தொற்று பதிவாகியுள்ளது.

நோய்ப்பரவல் அதிகரித்துவிடக்கூடாது என்பதற்காகக் கடுமையான கண்காணிப்பு நடவடிக்கைகளை அந்நாட்டு அதிகாரிகள் எடுத்து வருகின்றனர்.

ஹா நாம் மாநிலத்தில் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த நால்வருக்குக் கிருமித்தொற்று அடையாளம் காணப்பட்டது.

ஹோ சி மின் சிட்டியில் ஒருவர் பாதிக்கப்பட்டுள்ளார்.

அண்மையில் ஜப்பானுக்குப் பயணம் மேற்கொண்டு நாடு திரும்பிய ஒருவருக்கு நோய்த்தொற்று ஏற்பட்டது. புதிதாகப் பாதிக்கப்பட்ட ஐந்து பேரும் அவருடன் தொடர்பில் இருந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஜப்பானுக்குச் சென்று வந்தவர் தனிமைப்பட்டிருந்தார் என்றும் அவருக்குப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன என்றும் அதிகாரிகள் கூறினர்.

வியட்நாமில் இதற்கு முன்னர் 3 முறை COVID-19 நோய்ப்பரவல் ஏற்பட்டுள்ளது.

கடுமையான கட்டுப்பாடுகளைக் கடைப்பிடித்து நோய்ப்பரவலை அது முறியடித்தது.

நான்காம் கட்ட நோய்ப்பரவல் வந்துவிடக்கூடாது என்பதில் வியட்நாம் மிகக் கவனமாக உள்ளது.

-REUTERS

 

Top