Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

இங்கிலாந்திற்குள் பெட்டிக்குள் வைத்துக் கடத்தப்பட்டுக் காப்பற்றப்பட்ட சிறுவன் - நன்றி தெரிவித்துக் கடிதம்

இங்கிலாந்திலுள்ள டோவர் போர்ட் (Dover Port) துறைமுகம் வழியே 2018 மே மாதம் சென்ற வாகனத்தை எல்லைப் பாதுகாப்பு அதிகாரிகள் நிறுத்திச் சோதனை செய்தனர்.

வாசிப்புநேரம் -
இங்கிலாந்திற்குள் பெட்டிக்குள் வைத்துக் கடத்தப்பட்டுக் காப்பற்றப்பட்ட சிறுவன் - நன்றி தெரிவித்துக் கடிதம்

(படம்: Kent County Council)


இங்கிலாந்திலுள்ள டோவர் போர்ட் (Dover Port) துறைமுகம் வழியே 2018 மே மாதம் சென்ற வாகனத்தை எல்லைப் பாதுகாப்பு அதிகாரிகள் நிறுத்திச் சோதனை செய்தனர்.

காரின் பின்புறத்திலிருந்த பெட்டியிலிருந்து ஒரு கை வெளியே நீட்டிக்கொண்டிருந்ததை அதிகாரிகள் கவனித்தனர்.

பாதி திறந்துகிடந்த பெட்டிக்குள், மோசமான நிலையில் 16 வயது ஃபொங் இருந்ததைக் கண்டனர் அதிகாரிகள்.

உடனடியாக அவர் பெட்டியிலிருந்து வெளியே எடுக்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

வியட்நாமைச் சேர்ந்த அந்த இளையரை இங்கிலாந்தினுள் கடத்த முயன்றதற்காக 20 வயது ஆண்டிரே லான்சூவுக்கு (Andrei Iancu) 18 மாதச் சிறைதண்டனை விதிக்கப்பட்டது.

மருத்துவமனையில் 6 நாள் சிகிச்சை பெற்ற பின், கெண்ட் கௌண்ட்டியிலுள்ள வளர்ப்புப் பெற்றோர் திட்டத்தில் சேர்க்கப்பட்டார் ஃபொங்.

அது அப்போது.

இப்போது அந்தத் திட்டத்தின்வழி தாய், சகோதரர், சகோதரி, தாத்தா என ஒரு குடும்பத்தையே பெற்றுள்ளார் ஃபொங்.

தமக்கு இப்படிப்பட்ட வாழ்க்கையை உருவாக்கிக் கொடுத்த அனைவருக்கும் நன்றி தெரிவிக்கும் கடிதம் எழுதியுள்ளார் ஃபொங்.

முதல்முறையாகத் தமக்கென்று ஒரு படுக்கை அறை இருப்பதாகவும் கல்வி வழி தன்னுடைய வாழ்க்கை மேம்பட்டுள்ளதாகவும் அவர் அதில் எழுதியிருந்தார்.

அதிலும் தன்னை நேசிக்கும், தான் நேசிக்கும் ஒரு குடும்பத்தைப் பெற்றதில் அவர் அதிக ஆனந்தமடைந்துள்ளது கடிதத்தில் பிரதிபலித்தது.



 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்