Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

பினாங்குப் பால விபத்து - குற்றச்சாட்டை மறுத்துள்ள ஓட்டுநர்

மலேசியாவின் பினாங்குப் பாலத்தில் கவனமின்றி வாகனத்தைச் செலுத்தி முன்னாள் பள்ளி நண்பரின் மரணத்திற்குக் காரணமாய் இருந்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள ஓட்டுநர் இன்று (பிப்ரவரி 11) நீதிமன்றத்தில் அதனை மறுத்துள்ளார்.

வாசிப்புநேரம் -
பினாங்குப் பால விபத்து - குற்றச்சாட்டை மறுத்துள்ள ஓட்டுநர்

(படம்: TODAY)

மலேசியாவின் பினாங்குப் பாலத்தில் கவனமின்றி வாகனத்தைச் செலுத்தி முன்னாள் பள்ளி நண்பரின் மரணத்திற்குக் காரணமாய் இருந்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள ஓட்டுநர் இன்று (பிப்ரவரி 11) நீதிமன்றத்தில் அதனை மறுத்துள்ளார்.

சாலைப் போக்குவரத்துச் சட்டத்தின் கீழ் 21 வயது வைத்தீஸ்வரன் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

குற்றம் நிரூபிக்கப்பட்டால் 10 ஆண்டு வரையிலான சிறைத்தண்டனையும் 20,000 ரிங்கிட் (6,700 வெள்ளி) வரையிலான அபராதமும் விதிக்கப்படலாம்.

வைத்தீஸ்வரன் விசாரணை கோரியுள்ளார்.

ஜனவரி 20 அன்று பினாங்குப் பாலத்தில் 20 வயது மொய் யுன் பெங் ( Moey Yun Peng) செலுத்திக்கொண்டிருந்த வாகனத்தை வைத்தீஸ்வரனின் கார் மோதியதாக நம்பப்படுகிறது.

அவ்வழியே சென்ற வாகனத்தின் கேமராவில் சம்பவம் பதிவாகியுள்ளது.

வைத்தீஸ்வரன் மோதியதாகக் கூறப்படும் வாகனம் கட்டுப்பாட்டை இழந்து பாலத்திலிருந்து தண்ணீருக்குள் விழுந்தது.

அதில் சிக்கிய மொய் மாண்டார்.

தற்போது 7,000 ரிங்கிட் பிணையில் வைத்தீஸ்வரன் விடுவிக்கப்பட்டுள்ளார்.

மார்ச் 18ஆம் தேதி அன்று மீண்டும் விசாரணை நடைபெறும்.

அது வரை வைத்தீஸ்வரனின் ஓட்டுநர் உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்