Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

ஒலிம்பிக் போட்டிகளில் கிருமி பரவும் அபாயம் குறித்து எச்சரிக்கை

தோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளின்போது COVID-19 கிருமி பரவும் அபாயம் குறித்து ஜப்பானின் மூத்த கிருமி ஆய்வாளர் எச்சரித்துள்ளார்.

வாசிப்புநேரம் -

தோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளின்போது COVID-19 கிருமி பரவும் அபாயம் குறித்து ஜப்பானின் மூத்த கிருமி ஆய்வாளர்
எச்சரித்துள்ளார்.

Times of London செய்தித்தாள், அதனைத் தெரிவித்தது.

அரசாங்கமும், அனைத்துலக ஒலிம்பிக் குழு உள்ளிட்ட ஏற்பாட்டுக் குழுவும் பாதுகாப்பான விளையாட்டுகளை நடத்துவதாகக் கூறிவருவதைப் பல்கலைக்கழகப் பேராசிரியருமான ஹிரோஷி ஒஷித்தானி (Hiroshi Oshitani) சுட்டினார்.

ஆனால், கிருமி பரவும் அபாயம் இருப்பது அனைவருக்கும் தெரியும் என்றார் அவர்.

கிருமி பரவும் சாத்தியம் இல்லாத ஒலிம்பிக் விளையாட்டுகளை நடத்த வாய்ப்பு இல்லை என்றார் அவர்.

தோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள், வெளிநாட்டுப் பார்வையாளர்கள் இன்றி, அடுத்த மாதம் 23ஆம் தேதி தொடங்கவுள்ளன.

ஜப்பானில் சுமார் 760,000 கிருமித்தொற்றுச் சம்பவங்கள் உறுதியாகியுள்ளன.

13,500க்கும் அதிகமானோர் மாண்டனர்.
-Reuters 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்