Images
  • korea won
    (படம்:REUTERS/Thomas White/Illustration/Files)

கிருமித்தொற்றுக்குப் பயந்து பணத்தைத் துவைக்கும் தென் கொரியர்கள்

பண நோட்டுகள் மூலம் கிருமித்தொற்று பரவக்கூடும் என்று அஞ்சும் சில தென் கொரியர்கள் தங்கள் பணத்தில் உள்ள் கிருமிகளை நீக்க விநோதமான முறைகளை நாடியுள்ளனர்.

சிலர் பணத்தைத் துணி துவைக்கும் கருவியில் போட்டுப் பிழிந்து எடுக்கிறார்களாம்.

ஒருவர் சுமார் 40,800 வெள்ளி மதிப்பிலான நோட்டுகளை அவ்வாறு துவைத்தார்.

சேதமடைந்த பணத்தில் ஏறத்தாழ 26,300 வெள்ளியை மட்டுமே வங்கியால் அவருக்கு மாற்றிக் கொடுக்க முடிந்தது.

இன்னும் சிலரோ தங்கள் பணத்தை நுண்ணலை அடுப்பில் (microwave oven) சூடுகாட்டுகிறார்களாம்.

கடந்த 6 மாதங்களில், எரிந்த பணத்தை வங்கியில் மாற்றியோரின் எண்ணிக்கை, சென்ற ஆண்டுடன் ஒப்பிடுகையில் 3 மடங்கு அதிகரித்ததாகத் தென் கொரியாவின் மத்திய வங்கி தெரிவித்தது.

மக்கள் பணத்தில் உள்ள கிருமிகளை நீக்க முயற்சி செய்ததே அதற்குக் காரணமாக இருக்கக்கூடும் என்று அது கூறியது.

அவ்வாறு, சுமார் 1.1 மில்லியன் வெள்ளி் மதிப்பிலான எரிந்துபோன பணம் இந்த ஆண்டின் முதல் 6 மாதங்களில் வங்கியில் மாற்றப்பட்டதாக வங்கி அதிகாரி ஒருவர் குறிப்பிட்டார்.

பணத்தில் கிருமித்தொற்றை நீக்குவதற்காக, அதை 2 வாரங்களுக்குத் தனிமைப்படுத்துவதாகவும் ஒரு சில நோட்டுகளை எரிக்கப்போவதாகவும் மார்ச் மாதத்தில் கொரியா வங்கி கூறியிருந்தது. 

Top