Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

சீனாவின் Vivo நிறுவனம் இந்தியக் கிரிக்கெட் போட்டியின் ஆதரவாளராகத் தொடராது

சீனாவின் Vivo நிறுவனம் இந்தியக் கிரிக்கெட் போட்டியின் ஆதரவாளராகத் தொடராது

வாசிப்புநேரம் -

சீனாவின் Vivo கைத்தொலைபேசி நிறுவனம் இந்தியக் கிரிக்கெட் போட்டியான IPL-க்கு ஆதரவாளராக இந்த ஆண்டு தொடராது.

அந்தத் தகவலை இந்தியக் கிரிக்கெட் வாரியம் உறுதிப்படுத்தியது.

உலக அளவில் பிரபலமான இந்தியப் பிரிமியர் லீக் கிரிக்கெட் போட்டியின் தலைப்பு ஆதரவாளராக Vivo 2018ஆம் ஆண்டு முதல் இருந்து வருகிறது.

இந்தப் பருவத்திற்கும் அது ஆதரவாளராகத் தொடரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தற்போது அதில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.

2018ஆம் ஆண்டு முதல் 2022 ஆம் ஆண்டு வரை தலைப்பு ஆதரவாளராகச் செயல்பட Vivo 293 மில்லியன் டாலர் நிதி ஒதுக்கியிருந்தது.

இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையில் எல்லைப் பூசல் ஏற்பட்டது.

அதைத் தொடர்ந்து இந்தியாவில் சீன நிறுவனங்களுக்கும், அவற்றின் பொருள்களுக்கும் எதிர்ப்பு எழுந்தது.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்