Images
  • Vote Buying
    (படம்: AFP/DIPTENDU DUTTA)

தமிழ்நாட்டில் வாக்காளர்களுக்குப் பணம் கொடுக்கத் திட்டமிடப்பட்டதாக குற்றச்சாட்டுகள் - வாக்குப் பதிவு நிறுத்தம்

(வாசிப்பு நேரம்: 1 நிமிடத்திற்குள்)

தமிழ்நாட்டின் வேலூர் நகரத்தில் வாக்காளர்களுக்குப் பணம் கொடுக்கத் திட்டமிடப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டுகளின் தொடர்பில், இந்திய அதிகாரிகள் அங்கு வாக்குப் பதிவை நிறுத்தியுள்ளனர்.

தேசியத் தேர்தல் ஒன்றில், அத்தகைய குற்றச்சாட்டுகளின் தொடர்பில் வாக்குப் பதிவு நிறுத்தப்பட்டிருப்பது இதுவே முதல்முறை.

திராவிட முன்னேற்றக் கழகத்தின் வேட்பாளர் ஒருவர் லஞ்சமாக வழங்கியதாகக் கூறப்படும் ஒன்றரை மில்லியன் டாலருக்கும் அதிகமான தொகையை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

நியாயமான முறையில் தேர்தலை நடத்த, அங்கு சூழல் சரியாக இல்லை என்று தேர்தல் ஆணையம் தெரிவித்தது.

ஆகையால், வேலூர் நகர வாக்காளர்கள் நாளை நடைபெறவிருக்கும் இரண்டாம் சுற்று வாக்குப் பதிவில் வாக்களிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

Top