Images
  • myanmar (11)
    (படம்: AP)

மியன்மார் நெருக்கடியில் உள்நோக்கம் கொண்ட சில சக்திகள் தலையிடுகின்றன: சீனா

மியன்மார் நெருக்கடியில் வெளிப்புறத் தலையீடு குறித்து தென்கிழக்காசிய நாடுகள் கவனமாக இருக்கவேண்டும் என்று சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீ (Wang Yi) கேட்டுக்கொண்டுள்ளார்.

ஆட்சிக் கவிழ்ப்புக்கு எதிராக ஆர்ப்பரிப்போர் மீதான வன்முறை நடவடிக்கையை நிறுத்தும்படியும், மியன்மாரில் ஜனநாயகத்தை நிலைநாட்டும்படியும், அனைத்துலக ரீதியாக அழுத்தம் அதிகரித்து வருகிறது.

மியன்மார் நெருக்கடியில் உள்நோக்கங்கள் கொண்ட சில சக்திகள் தலையிடுவதாகத் திரு வாங் எச்சரித்தார்.

கடந்த வாரம் அவர் சிங்கப்பூர், மலேசியா, இந்தோனேசியா, பிலிப்பீன்ஸ் ஆகிய நாடுகளைச் சேர்ந்த வெளியுறவு அமைச்சர்களைச் சந்தித்துப் பேசினார்.

அனைத்துலகத் தலையீடு நெருக்கடியை மேலும் மோசமாக்குகிறது என்று திரு வாங் கூறினார்.

மோதல்களைத் தூண்டிவிட்டுப், பொருளியல் தடைகளை விதிப்பதற்குப் பதிலாக, நடுநிலையான அணுகுமுறையைப் பின்பற்றுமாறு அவர் நாடுகளிடம் வலியுறுத்தினார்.

சீனா, நெருக்கடியைச் சமாளிக்க ஆசியான் நாடுகளுக்கு உதவிக்கரம் நீட்டியுள்ளது.

இந்நிலையில், ஆசியான் உறுப்பு நாடுகள் மியன்மார் நிலவரம் குறித்துச் சந்திக்கத் திட்டமிடுகின்றன.

அந்த உச்சநிலைச் சந்திப்பு இந்தோனேசியாவில் இடம்பெறும் என்று, தற்போதைய ஆசியான் தலைமைத்துவப் பொறுப்பிலுள்ள புருணை தெரிவித்துள்ளது. 

Top