ஜப்பானுக்கு அதிகாரத்துவப் பயணம் மேற்கொள்ளும் சீன வெளியுறவு அமைச்சர்
சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீ (Wang Yi), இன்று அதிகாரத்துவப் பயணம் மேற்கொண்டு ஜப்பான் செல்லவிருக்கிறார்.
சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீ (Wang Yi), இன்று அதிகாரத்துவப் பயணம் மேற்கொண்டு ஜப்பான் செல்லவிருக்கிறார்.
செப்டம்பரில் ஜப்பானின் புதிய பிரதமராகத் திரு. யோஷிஹிடே சுகா (Yoshihide Suga) பதவியேற்றுக்கொண்ட பிறகு சீன உயர் அதிகாரி ஒருவர் அங்கு செல்வது இதுவே முதல்முறை.
வட்டாரத்தில் சீனாவின் ஆதிக்கம் அதிகரித்துவருவதாகக் கவலை நிலவும் வேளையில்,
சீன அமைச்சர் ஜப்பானியப் பிரதமரைச் சந்தித்துப் பேசவிருக்கிறார்.
சீனாவின் ஆதிக்கத்தைக் கட்டுப்படுத்தும் நோக்கில், ஆஸ்திரேலியா, வியட்நாம், இந்தோனேசியா ஆகியவற்றுடன் உறவுகளை வலுப்படுத்துவதில் ஜப்பானியப் பிரதமர் சுகா முனைந்துள்ளார்.
பலதரப்பு விநியோக முறையைப் பயன்படுத்தும்படியும், சீனாவைச் சார்ந்திருக்கும் போக்கைக் குறைத்துக்கொள்ளும்படியும், ஜப்பானிய நிறுவனங்கள் ஊக்குவிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், உயர்நிலைப் பேச்சுகளின் மூலம் பிரச்சினைகளுக்குப் படிப்படியாகத் தீர்வுகாணலாம் என்று ஜப்பானிய வெளியுறவு அமைச்சர் கூறியுள்ளார்.