Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

'தென் சீனக் கடல் விவகாரம் - ஆசியானும் சீனாவும் வெளிப்புற இடையூறுகளை அகற்ற இணைந்து பணியாற்ற வேண்டும்'

சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீ (Wang Yi), தென் சீனக் கடல் விவகாரத்தில் வெளித்தரப்பு இடையூறுகளை அகற்றுவதன் தொடர்பில் ஆசியானும், சீனாவும் இணைந்து பணியாற்ற வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

வாசிப்புநேரம் -
'தென் சீனக் கடல் விவகாரம் - ஆசியானும் சீனாவும் வெளிப்புற இடையூறுகளை அகற்ற இணைந்து பணியாற்ற வேண்டும்'

(கோப்புப் படம்: REUTERS/Thomas Peter)

சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீ (Wang Yi), தென் சீனக் கடல் விவகாரத்தில் வெளித்தரப்பு இடையூறுகளை அகற்றுவதன் தொடர்பில் ஆசியானும், சீனாவும் இணைந்து பணியாற்ற வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

ஆனால், அதுபற்றி விரிவாக ஏதும் அவர் கருத்துரைக்கவில்லை.

தென் கிழக்காசியப பயணத்தின் ஓர் அங்கமாக மலேசியா சென்றுள்ள அவர், செய்தியாளர் கூட்டத்தில் பேசினார்.

அதே கூட்டத்தில் பேசிய மலேசிய வெளியுறவு அமைச்சர் ஹிஷாமுதீன் ஹுசேன் (Hishammuddin Hussein), தென் சீனக் கடல் சர்ச்சைகளுக்கு வட்டாரக் கலந்துரையாடல்கள் மூலம் தீர்வுகாண வேண்டும் என்று கூறினார்.

அண்மை மாதங்களில் சர்ச்சைக்குரிய கடற்பகுதியில், பெய்ச்சிங் ராணுவ நடவடிக்கைகள மேற்கொண்டது.

அந்த வட்டாரத்தில், கடல்துறை சாம்ராஜ்ஜியத்தை நிறுவச் சீனா முயல்வதாக அமெரிக்கா சாடியது. 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்