Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

மலேசியா: அமைச்சர் அஸ்மின் சம்பந்தப்பட்டதாகக் கூறப்படும் பாலுறவுக் காணொளியைப் பகிர்ந்தால் அபராதம், சிறை

மலேசிய பொருளியல் விவகார அமைச்சர் அஸ்மின் அலி சம்பந்தப்பட்டதாகக் கூறப்படும், பாலியல் காட்சிகளைக் கொண்ட காணொளியைப் பகிர்வதற்கு எதிராக அந்நாட்டு அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

வாசிப்புநேரம் -
மலேசியா: அமைச்சர் அஸ்மின் சம்பந்தப்பட்டதாகக் கூறப்படும் பாலுறவுக் காணொளியைப் பகிர்ந்தால் அபராதம், சிறை

படம்: Bernama

(வாசிப்பு நேரம்: 1 நிமிடத்திற்குள்)

மலேசிய பொருளியல் விவகார அமைச்சர் அஸ்மின் அலி சம்பந்தப்பட்டதாகக் கூறப்படும், பாலியல் காட்சிகளைக் கொண்ட காணொளியைப் பகிர்வதற்கு எதிராக அந்நாட்டு அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

அந்தக் காணொளியைப் பகிர்வோருக்கு 12,000 டாலர் வரை அபராதமோ ஓராண்டு சிறைத்தண்டனையோ அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.

மலேசிய தொடர்பு, பல்லூடகக் கண்காணிப்பு அமைப்பு அதனைத் தெரிவித்தது.

அந்தக் காணொளி பற்றி கருத்துரைத்த பிரதமர் மகாதீர் முகமது, அது பொலியானது என வருணித்தார்.

அரசியல் நோக்கம் கொண்டவர்கள் அதனைத் தயாரித்ததாக அவர் கூறினார்.

இரு ஆடவர்கள் ஓரினப் பாலுறவில் ஈடுபடும் காட்சிகளைக் கொண்ட காணொளியில் இடம்பெற்றதாகக் கூறப்படும் அமைச்சர் அஸ்மின் அலி, அது தமது அரசியல் வாழ்க்கையை அழிக்க வரையப்பட்ட சதித் திட்டம் எனக் கூறுகிறார்.

அதன் தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுக்கப்போவதாக அவர் சொன்னார்.

திரு. அஸ்மின் அலி, PKR கட்சியைச் சேர்ந்தவர்.

கட்சித் தலைவர் அன்வார் இப்ராஹிமும் அந்தக் காணொளிக்குக் கண்டனம் தெரிவித்தார்.


விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்