Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

இரு வாரங்கள் கடலில் தத்தளித்த சொகுசுக் கப்பல் கம்போடியாவில் கரை சேர்ந்தது

இரண்டு வாரங்களாக கடலில் தத்தளித்துக்கொண்டிருந்த MS Westerdam சொகுசுக் கப்பல் ஒருவழியாக கரை சேர்ந்தது.

வாசிப்புநேரம் -
இரு வாரங்கள் கடலில் தத்தளித்த சொகுசுக் கப்பல் கம்போடியாவில் கரை சேர்ந்தது

(படம்: AFP/Tand Chhin Sothy)

இரண்டு வாரங்களாக கடலில் தத்தளித்துக்கொண்டிருந்த MS Westerdam சொகுசுக் கப்பல் ஒருவழியாக கரை சேர்ந்தது.

கப்பலில் இருந்த இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட பயணிகள் கம்போடியாவின் சீஹனோக்வில் (Sihanoukville) துறைமுகத்தில் இறங்கினர்.

Covid 19 கிருமித்தொற்றுக்கு அஞ்சி, ஐந்து நாடுகள், தங்கள் கரைகளில் அணையக்கூடாது என்று Westerdam சொகுசுக் கப்பலை நிராகரித்துவிட்டன.

அதையடுத்து, சீஹனோக்வில் துறைமுகத்தில் அணையலாம் என்று கம்போடியா அதிகாரிகள் சொகுசுக் கப்பலுக்கு நேற்று அனுமதி வழங்கினர்.

துறைமுகத்தில் இறங்குவதற்கு முன், கப்பலின் பயணிகளை கம்போடியச் சுகாதார அதிகாரிகள் தீவிரமாகப் பரிசோதித்தனர்.

பயணிகளுக்குக் கிருமித்தொற்று இல்லை என்று உறுதிசெய்யப்பட்டது.

சிறப்பு விமானங்கள் மூலம் தலைநகர் Phnom Penhவுக்குப் பயணிகளை அனுப்பி வைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

சொகுசுக் கப்பல் அணைவதற்கு கம்போடியா அனுமதி வழங்கியதை உலக சுகாதார நிறுவனம் பாராட்டியது.

அனைத்துலக ஒற்றுமைக்கு கம்போடியாவின் செயல் ஒரு சிறந்த உதாரணம் என்று அது குறிப்பிட்டது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்