Images
  • whale shark
    (படம்: Pexels)

வயிற்றில் பிளாஸ்டிக் பையுடன் மாண்டு கிடக்கக் காணப்பட்ட மீன்

மலேசியாவின் சபா கடற்கரையோரமாக திமிங்கில சுறா ஒன்று மாண்டுகிடக்கக் காணப்பட்டுள்ளது.

பிளாஸ்டிக் பையை உண்டதால் உடலில் கோளாறு ஏற்பட்டு மீன், பிறகு பசியால் வாடி மாண்டதாகத் தெரிகிறது.

மாண்ட மீன்னைச் சோதித்துப் பார்த்தபோது, அதன் வயிற்றில் 46 செண்டிமீட்டர் உயரமும் 43 செண்டிமீட்டர் அகலமும் கொண்ட பிளாஸ்டிக் பை ஒன்று கண்டெடுக்கப்பட்டது.

சில நாள்களுக்கு முன்னர் 4.61 மீட்டர் நீளம் கொண்ட இந்த இளம், ஆண் திமிங்கில சுறா மீனின் சடலம் கடற்கரையோரமாகக் கண்டெடுக்கப்பட்டது.

கரையோரமாக மெதுவோட்டம் ஓடிக்கொண்டிருந்த ஆசிரியர், அதனைக் கண்ட பிறகு சபா வனவிலங்குத் துறையிடம் தகவல் அளித்தார்.

திமிங்கில சுறா உலகத்தின் ஆகப் பெரிய மீன். 1985யின் மீன்பிடி சட்டத்தின் கீழ், அந்த வகை மீன்னைப் பிடிப்பது, உண்பது, விற்பது ஆகியவை குற்றமாகும்.  

Top