Images
  • Whatsapp
    (படம்: CNA) 

இந்தியாவில் தொலைக்காட்சி விளம்பரங்களை வெளியிட்டுள்ள WhatsApp

இந்தியாவில் பொய்த் தகவல்கள் குறித்த விழிப்புணர்வை அதிகரிக்க WhatsApp தொலைக்காட்சி விளம்பரங்களை வெளியிட்டுள்ளது.

Facebookஇன் நிறுவனம் ஒன்று தொலைக்காட்சி விளம்பரங்களை வெளியிடுவது இதுவே முதல்முறை.

இந்தியாவில் பிள்ளைகள் கடத்தப்படுவதாகப் பரவிய போலிச் செய்தி காரணமாக ஏற்பட்ட வன்முறையால் 30 பேர் உயிரிழந்தனர்.

அதைத் தொடர்ந்து WhatsApp விழிப்புணர்வூட்டும் முயற்சியில் இறங்கியுள்ளது.

ஆபத்தான வதந்திகள் WhatsAppஇல் பரவுவதால் ஏற்படக்கூடிய விளைவுகளை ஒரு நிமிடத்தில் எடுத்துக்காட்டும் வகையில் 3 தொலைக்காட்சி விளம்பரங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன.

கடந்த ஆகஸ்ட் மாதம், இந்திய வானொலிகளில் பொய்த் தகவல்களை முறியடிப்பதன் தொடர்பான விளம்பரங்கள் ஒலியேற்றப்பட்டன. 

Top