Images
  • whatsapp
    (படம்: REUTERS/Dado Ruvic/Files)

பொய்ச் செய்திகள் பரவுவது தொடர்பாக WhatsApp நிறுவனத்தைச் சந்திக்கவிருக்கும் இந்திய அரசாங்கம்

பொய்ச் செய்திகள் பரப்பப்படுவதன் தொடர்பில் இந்தியத் தகவல் தொடர்பு அமைச்சின் மூத்த அதிகாரிகள் WhatsApp நிறுவன அதிகாரிகளைச் சந்திக்கவுள்ளனர்.

பொய்ச் செய்திகளைக் கண்காணிப்பது பற்றியும், அவை எங்கு தொடங்குகின்றன என்பது பற்றியும் அப்போது ஆலோசிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பொய்ச் செய்திகள் பரவுவதன் தொடர்பில் இதற்குமுன் இந்திய அரசாங்கம் WhatsApp நிறுவனத்திடம் சில தகவல்களைக் கேட்டிருந்தது ஆனால் பாதுகாப்புக் காரணங்களுக்காக WhatsApp நிறுவனம் உதவ மறுத்தது.

இந்தியாவில் கிட்டத்தட்ட 220 மில்லியன் பேர் WhatsApp செயலியைப் பயன்படுத்துகின்றனர்.

WhatsApp மூலம் பரவிய பொய்ச் செய்திகளால் சென்ற ஆண்டிலிருந்து இதுவரை 30க்கு மேற்பட்டவர்கள் தாக்கப்பட்டு மரணமடைந்தனர்.

பொய்ச் செய்திகளை நம்பாமல் இருக்க வானொலி, தொலைக்காட்சி, அச்சு ஊடகம் ஆகியவற்றில் விளம்பரம் செய்யப்பட்டு வருகிறது.
 

Top