Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

இந்தியாவில் WhatsApp மூலம் வரும் வதந்திகளைக் கண்டுபிடிக்கப் புதிய வழி

WhatsApp மூலம் வரும் வதந்திகளைக் கண்டுபிடிக்க புதிய, எளிய உதவிக் குறிப்புகளை நாளேடுகளில் விளம்பரம் செய்துவருகிறது WhatsApp.

வாசிப்புநேரம் -
இந்தியாவில் WhatsApp மூலம் வரும் வதந்திகளைக் கண்டுபிடிக்கப் புதிய வழி

(படம் : AFP/Prakash SINGH)

WhatsApp மூலம் வரும் வதந்திகளைக் கண்டுபிடிக்க புதிய, எளிய உதவிக் குறிப்புகளை நாளேடுகளில் விளம்பரம் செய்துவருகிறது WhatsApp.

இந்தியாவில் WhatsApp-இல் வரும் வதந்தியை நம்பி கடந்த இரு மாதங்களில் கிட்டத்தட்ட 20 பேருக்குமேல் அடித்துக் கொல்லப்பட்டனர்.

மொத்தம்10 உதவிக் குறிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.

அவை நாளேடுகளில் முழுப்பக்கத்தில் விளம்பரம் செய்யப்பட்டு வருகின்றன.

ஆங்கிலம் மற்றும் ஹிந்தி மொழிகளில் அவை அச்சிடப்படுகின்றன.

ஒரு செய்தி பலமுறை வந்தாலும் அதைத் தீர விசாரித்து அதன்பின் மற்றவரிடம் பகிர்ந்துகொள்ளுமாறு WhatsApp கேட்டுக்கொண்டது.

கூடிய விரைவில் இந்தியா WhatsApp செயலியில் ஒரு புதிய அம்சத்தை உருவாக்கவும் எண்ணுகிறது.

செய்தியை ஒருவர் தானே உருவாக்குகிறாரா அல்லது மற்றவரிடமிருந்து வந்ததைப் பகிர்ந்துகொள்கிறாரா என்பதைக் கண்டுபிடிக்க அது உதவும் எனக் கூறப்படுகிறது.

காவல் துறையிறனரும் வதந்திகளை அனுப்பும் கும்பல்களைக் கைதுசெய்து வருகிறது.

இந்தியாவில் சராசரியாக 200 மில்லியன் பேர் WhatsApp செயலியைப் பயன்படுத்துகின்றனர்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்