Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

சாலையின் நடுவே உருண்டுவந்த சக்கரத்தால் 2 வாகனங்கள் சேதம்

தாம் காரை வாங்கி நான்கு மாதங்கள் மட்டுமே ஆனதாகச் சொன்ன ஆஹ் பூன், சக்கரம் ஆகாயத்திலிருந்து விழுந்து உருண்டோடி வந்ததுபோன்று இருந்ததாகச் சொன்னார். 

வாசிப்புநேரம் -
சாலையின் நடுவே உருண்டுவந்த சக்கரத்தால் 2 வாகனங்கள் சேதம்

(படம்:Facebook / Ah Boon, Facebook / Dekye Hanz)

மலேசியாவின் ஜொகூரில், சாலையின் நடுவே உருண்டுவந்த சக்கரத்தினால் இரண்டு கார்கள் கடும் சேதமாகியுள்ளன.

விரைவுச்சாலையில் எங்கிருந்தோ சக்கரம் உருண்டுவந்து தமது காரை மோதும் காணொளியை ஆஹ் பூன் என்பவர் Facebookஇல் பதிவேற்றம் செய்திருக்கிறார்.

கடந்த 7ஆம் தேதி சம்பவம் நடந்ததாகக் காணொளியில் பதிவாகியிருக்கிறது.

விரைவுச்சாலைக்கு அருகே உள்ள புதர்ப்பகுதியில் கார் மோதி நிற்பதைக் காணொளியில் காணமுடிகிறது. 

தாம் காரை வாங்கி நான்கு மாதங்கள் மட்டுமே ஆனதாகச் சொன்ன ஆஹ் பூன், சக்கரம் ஆகாயத்திலிருந்து விழுந்து உருண்டோடி வந்ததுபோன்று இருந்ததாகச் சொன்னார். 

சம்பவத்தின் படங்களைப் பதிவேற்றம் செய்திருந்த இன்னொருவர், லாரி ஒன்றின் சக்கரம் கழன்று உருண்டோடியதில் இரண்டு கார்கள் சேதமடைந்ததாகச் சொன்னார்.
 
விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்