Images
  • delhi pollutoin
    (படம்: REUTERS/Anushree Fadnavis)

இந்தியா: காற்றுத் தூய்மைக்கேட்டால் கடந்த ஆண்டு 1.2 மில்லியன் பேர் பலி

இந்தியாவில் கடந்த ஆண்டு காற்றுத் தூய்மைக்கேட்டால் 1.2மில்லியன் பேர் மாண்டனர் என்று ஆய்வு ஒன்று கூறுகிறது.

அதனால் ஒருவரின் சராசரி ஆயுட்காலம், சுமார் ஒன்றே முக்கால் ஆண்டு குறைந்துள்ளதாகவும் அது குறிப்பிட்டது.

70 வயதைக் கடந்தவர்களைவிட இளம் வயதினரில் 51 விழுக்காட்டினர் மாண்டதாக "Lancet Planetary Health" சஞ்சிகை கூறியது.

டில்லி மிகமோசமான காற்றுத் தூய்மைக்கேட்டைக் கொண்டிருந்தது.

அதையடுத்து உத்தரப்பிரதேசம், பீகார், ஹரியானா முதலியவை அதிகத் தூய்மைக்கேட்டை கொண்ட வட்டாரங்களாக வரிசைப்படுத்தப்பட்டன.

உலகின் அதிகத் தூய்மைக்கேட்டைக் கொண்ட 14 நகரங்கள் இந்தியாவில் உள்ளதாக உலகச் சுகாதார நிறுவனம் கூறியது.

உலகம் முழுவதும் காற்றுத் தூய்மைக்கேட்டால் ஆண்டுக்கு 7 மில்லியன் பேர் மடிவதாக அது மதிப்பிட்டுள்ளது.  

Top