Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

வூஹான் நகருக்குச் செல்லும் உலகச் சுகாதார நிறுவனத்தின் அனைத்துலக நிபுணர் குழு

உலகச் சுகாதார நிறுவனத்தின் அனைத்துலக நிபுணர் குழு, இன்று சீனாவின் வூஹான் (Wuhan)நகருக்குச் சென்று சேரவிருக்கிறது.

வாசிப்புநேரம் -
வூஹான் நகருக்குச் செல்லும் உலகச் சுகாதார நிறுவனத்தின் அனைத்துலக நிபுணர் குழு

(படம்: REUTERS/Kim Kyung-Hoon)

உலகச் சுகாதார நிறுவனத்தின் அனைத்துலக நிபுணர் குழு, இன்று சீனாவின் வூஹான் (Wuhan)நகருக்குச் சென்று சேரவிருக்கிறது.

COVID-19 நோய் எங்கிருந்து, எவ்வாறு தொடங்கியது என்பதையும், அது விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்கு எவ்வாறு தொற்றியது என்பதையும் குறித்து, அந்தக் குழுவினர் புலனாய்வு செய்யவிருக்கின்றனர்.

வூஹானில், உயிருள்ள வனவிலங்களை விற்பனை செய்யும் சந்தையில்தான், முதன்முதலாக, மனிதர்களிடம் கிருமித்தொற்று அடையாளம் காணப்பட்டது.

நிபுணர் குழு, சீனாவை அடைந்ததும் தனிமைப்படுத்தப்படுத்தும் காலத்தை முடித்த பின்னரே, தனது விசாரணைகளை மேற்கொள்ளமுடியும்.

நிபுணர்கள், அடுத்தமாத நடுப்பகுதிவரை வூஹானில் இருப்பர் என்று தெரிவிக்கப்பட்டது.

இதற்கு முன்னதாகவே, உலகச் சுகாதார நிறுவனம், வூஹானுக்கு நிபுணர் குழுவை அனுப்பத் திட்டமிட்டிருந்தது.

ஆனால், அதற்கான ஏற்பாடுகளைச் செய்ய பெய்ச்சிங் தாமதப்படுத்தியதால், பயணம் ஒத்திவைக்கப்பட்டது.

கிருமித்தொற்று முதலில் கண்டறியப்பட்டபோது, சீனா அதை மூடி மறைக்க முயன்றதாகக் குறைகூறப்பட்டு வருகிறது. ஆனால், சீனா அதை மறுத்து வருகிறது.

கிருமித்தொற்றுக்கு இன்னார்தான் காரணம் எனப் பழிசுமத்துவது, நிபுணர் குழுவின் நோக்கம் அல்ல என்பதை, உலகச் சுகாதார நிறுவனத்தின் பேச்சாளர் தெளிவுபடுத்தினார். 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்