Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

பிளாஸ்டிக் கழிவுகளைத் திருப்பி அனுப்பும் தென்கிழக்காசிய நாடுகள் - நடந்தது என்ன?

அண்மைக் காலத்தில், தென்கிழக்காசிய நாடுகள் சில, வளர்ந்த நாடுகளிலிருந்து அனுப்பி வைக்கப்பட்ட கழிவுப் பொருள்களை சம்பந்தப்பட்ட நாடுகளுக்கே திருப்பி அனுப்பத் தொடங்கியுள்ளன.

வாசிப்புநேரம் -
பிளாஸ்டிக் கழிவுகளைத் திருப்பி அனுப்பும் தென்கிழக்காசிய நாடுகள் - நடந்தது என்ன?

(படம்: AFP)

அண்மைக் காலத்தில், தென்கிழக்காசிய நாடுகள் சில, வளர்ந்த நாடுகளிலிருந்து அனுப்பி வைக்கப்பட்ட கழிவுப் பொருள்களை சம்பந்தப்பட்ட நாடுகளுக்கே திருப்பி அனுப்பத் தொடங்கியுள்ளன.

வளர்ந்த நாடுகளின் கழிவுப் பொருள்கள் ஏன் இதுவரை தென்கிழக்காசிய நாடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டன? அந்த நடைமுறையில் ஏன் திடீர் மாற்றம்?

சில தகவல்கள்...

வளர்ந்த நாடுகள் பல ஆண்டுகளாக அவற்றின் பிளாஸ்டிக் குப்பைகளைச் சீனாவுக்கு அனுப்பிவைத்தன.

இறக்குமதி செய்யப்படும் அந்த பிளாஸ்டிக் சீனாவின் உற்பத்தித் துறை வளர்ச்சிக்குப் பயன்பட்டது.

அவ்வகையில் உலகின் பிளாஸ்டிக் குப்பைகளில் கிட்டத்தட்ட பாதி சீனாவுக்கு அனுப்பிவைக்கப்பட்டது.

ஆனால் 2018இல் அவ்வாறு பிளாஸ்டிக் கழிவை இறக்குமதி செய்வதற்குச் சீனாவில் தடை விதிக்கப்பட்டது.

அதனால் குழப்பமடைந்த வளர்ந்த நாடுகள், பிளாஸ்டிக் குப்பைகளை தென்கிழக்காசியாவிலுள்ள வளரும் நாடுகளுக்கு அனுப்பத்தொடங்கின.

ஆனால் இவ்வாறு அனுப்பிவைக்கபடும் பிளாஸ்டிக் கழிவுகளின் அளவு அதிகரிப்பதால், சமாளிக்கச் சிரமப்படுகின்றன தென்கிழக்காசிய நாடுகள்.

ஒப்புதல் வழங்கப்பட்ட கழிவுப் பொருள்களுடன் பிற கழிவுப் பொருள்களும் அனுப்பிவைக்கப்படுவதாகத் தென்கிழக்காசிய அதிகாரிகள் குறைகூறுகின்றனர்.

அதனால் அதிக அளவு பிளாஸ்டிக் சட்டவிரோதமாக எரிக்கப்படுவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

பிளாஸ்டிக்கை எரிப்பதால் அதிக அளவு நச்சு காற்றில் கலந்து உடல்நலக் கேடுகளை விளைவிப்பதாகவும் தென்கிழக்காசிய நாடுகள் தெரிவித்துள்ளன.

அதனால் சில நாடுகள் பிளாஸ்டிக் கழிவுகளை, அவை எங்கிருந்து அனுப்பப்பட்டனவோ அந்த நாடுகளுக்கே திருப்பி அனுப்பிவைக்கத்தொடங்கியுள்ளன.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்