Images
  • wild boar attack (1)
    (படம்: சேனல் நியூஸ்ஏஷியா/Screengrabs)

காட்டுப் பன்றியால் தாக்கப்பட்ட ஜப்பானிய ஆடவர்

சற்றும் எதிர்பாராத விதத்தில் ஜப்பானிய ஆடவர் ஒருவர் காட்டுப் பன்றியால் தாக்கப்பட்டார்.

ஜப்பானில் அந்த ஆடவர் ரயில் நிலையத்தை நோக்கி நடந்துகொண்டிருந்தபோது அச்சம்பவம் நிகழ்ந்தது. 

அதைச் சித்திரிக்கும் காணொளி கடந்த ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 4) இணையத்தளங்களில் பதிவு செய்யப்பட்டது. 

அதனை அடுத்து, அந்தக் காணொளி சமூக ஊடகங்களில் தீயாய்ப் பரவியது. 

அந்த ஆடவர் தூக்கியிருந்த கைப்பெட்டியை நோக்கி காட்டுப் பன்றி பாய்ந்தது காணொளியில் பதிவானது. 

ஆடவரையும் காட்டுப் பன்றியையும் கடந்துசென்ற வாகனங்கள் சத்தம் எழுப்பியதில், அது பயந்து ஓடிவிட்டது. 

காட்டுப் பன்றியால் தாக்கப்பட்ட ஆடவரின் இரண்டு கால்களிலும் காயங்கள் ஏற்பட்டன. 

அவற்றுக்கு 13 தையல்கள் போடப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.



 

Top