Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

இந்தோனேசியப் பாதுகாப்பு அமைச்சர் விராந்தோ கத்திக் குத்துத் தாக்குதலில் காயம்

இந்தோனேசியப் பாதுகாப்பு அமைச்சர் விராந்தோ கத்திக் குத்துத் தாக்குதலில் காயமடைந்துள்ளார்.

வாசிப்புநேரம் -
இந்தோனேசியப் பாதுகாப்பு அமைச்சர் விராந்தோ கத்திக் குத்துத் தாக்குதலில் காயம்

(படம்: Pandeglang Regional Police)

இந்தோனேசியப் பாதுகாப்பு அமைச்சர் விராந்தோ கத்திக் குத்துத் தாக்குதலில் காயமடைந்துள்ளார்.

அவர் ஜாவா தீவில் உள்ள பாண்டெகலாங் (Pandeglang) நகருக்கு சென்றபோது தாக்குதல் நடந்ததாகக் கூறப்படுகிறது.

தாக்குதலின் தொடர்பில் வெளியிடப்பட்ட காணொளியில் திரு. விராந்தோ தமது காரைவிட்டு இறங்கும்போது கத்தி ஏந்திய ஆடவரால் தாக்கப்பட்டுக் கீழே சரிகிறார்.

பின்னர் அவர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.

தாக்குதல் நடத்தியதாக நம்பப்படும் சந்தேக நபர் காவல்துறை அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்டார்.

சந்தேக நபர் ISIS பயங்கரவாதச் சித்தாந்தத்தால் ஈர்க்கப்பட்டவர் என்று அந்நாட்டுக் காவல் துறையினர் நம்புகின்றனர்.

72 வயது திரு. விராந்தோ 2016-ஆம் ஆண்டிலிருந்து பாதுகாப்பு அமைச்சராகப் பொறுப்பு வகிக்கிறார்.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்