Images
  • plane cafe-1
    படங்கள்: AFP/Mladen ANTONOV

தாய்லந்து: காப்பிக் கடைகளாக மாறும் விமானங்கள்

கொரோனா கிருமிப் பரவலால் விமானச் சேவைகள் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளன. முன்னைப் போல விமானங்களில் வெளிநாடுகளுக்குப் பயணம் செய்ய முடியாது.

ஆனால் வாடிக்கையாளர்களுக்குப் பறக்கும் அனுபவத்தை வழங்கும் நோக்கில் 'விமானக் காப்பிக் கடைகள்' தாய்லந்தில் பிரபலம் அடைந்து வருகின்றன.

சேவையில் ஈடுபடுத்தப்படாத பழைய விமானங்களில் இத்தகைய காப்பிக் கடைகள் அமைக்கப்பட்டுள்ளன.

விமானத்தில் இருக்கும் அதே இருக்கைகள். பானத்தைப் பருகியவாறு படங்களை எடுத்துகொள்ளலாம். ருசியான உணவுவகைகளையும் சுவைத்து மகிழலாம்.


வாடிக்கையாளர்களுக்குப் பயணத்தை உறுதிசெய்யும் சீட்டும்(Boarding pass) வழங்கப்படுகிறது. ஒருசில 'பயணிகளுக்கு' விமானியறையைச் சுற்றி பார்ப்பதற்கான வாய்ப்பும் வழங்கப்படுகிறது.

எல்லைகள் மூடப்பட்டுள்ள நிலையில் வாடிக்கையாளர்கள் இதுபோன்ற அனுபவத்தைப் பெற்று எல்லையில்லா மகிழ்ச்சியை அடைந்துவருகின்றனர்.


 

Top