Images
  • rape

இந்தியப் பெண்ணின் பாலியல் பலாத்கார, கொலை வழக்கு : விரைவு நீதிமன்றத்தில் விசாரிக்கப்படும்'


இந்தியாவில் சர்ச்சைக்குள்ளாகியுள்ள 26 வயதுப் பெண்ணின் பாலியல் பலாத்கார, கொலை வழக்கு விரைவு நீதிமன்றத்தில் விசாரிக்கப்படும் என்று தெலுங்கானாவின் முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

சம்பவம் குறித்து நடவடிக்கை எடுக்க மாநில அதிகாரிகள் மீது நெருக்குதல் அதிகரித்து வரும் வேளையில் முதலமைச்சர் சந்திரசேகர் ராவ் வழக்கு விசாரணை துரிதப்படுத்தப்படும் என்று கூறியுள்ளார்.

சம்பவம் குறித்து வருத்தம் தெரிவித்த அவர், பெண்ணின் குடும்பத்திற்கு முடிந்த அளவு உதவ மாநில அரசாங்கம் தயாராகவுள்ளதாகக் கூறியதாகவும் NDTV தெரிவித்துள்ளது.

பாலியல் பலாத்காரக் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்கும் வகையில் சட்டங்களை உடனடியாகத் திருத்த திரு. சந்திரசேகர் ராவின் மகனும் மாநில அமைச்சருமான திரு. KT ராமா ராவ், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் நால்வர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.



 

Top