Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

இந்தியா: உலகின் ஆக நீளமான 'கேக்'

உலகின் ஆக நீளமான 'கேக்' இந்தியாவில் தயாரிக்கப்பட்டுள்ளது. நூற்றுக்கணக்கான அடுமனையாளர்களும் சமையல் வல்லுநர்களும் இணைந்து சுமார் 6.5 கிலோ மீட்டர் நீளமுள்ள கேக்கை உருவாக்கியுள்ளனர்.

வாசிப்புநேரம் -
இந்தியா: உலகின் ஆக நீளமான 'கேக்'

படம்: AFP

உலகின் ஆக நீளமான 'கேக்' இந்தியாவில் தயாரிக்கப்பட்டுள்ளது. நூற்றுக்கணக்கான அடுமனையாளர்களும் சமையல் வல்லுநர்களும் இணைந்து சுமார் 6.5 கிலோ மீட்டர் நீளமுள்ள கேக்கை உருவாக்கியுள்ளனர்.

கேரளா மாநிலத்தில் உள்ள திரிச்சூர் நகரில் அந்த கின்னஸ் சாதனை நிகழ்த்தப்பட்டது. வெணிலா சுவையுடைய கேக்கின் எடை கிட்டத்தட்ட 27,000 கிலோ கிராம்.

சுமார் 1,500 பேர் அதனைத் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டனர். 12,000 கிலோ கிராம் சீனியும் மாவும் கேக்கில் பயன்படுத்தப்பட்டன.

கேக்கைத் தயாரிக்கும்போது சுகாதாரத்திற்கும் சுவைக்கும் முக்கியத்துவம் வழங்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

இதற்கு முன்னர் சீனாவில் தயாரிக்கப்பட்ட பழவகை கேக் ஒன்று உலகின் ஆக நீளமான கேக்காக சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றிருந்தது. அதன் நீளம் சுமார் 3.2 கிலோ மீட்டர்.

2018ஆம் ஆண்டு அந்தச் சாதனை நிகழ்த்தப்பட்டது. 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்