Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

வூஹான்: கிருமிப்பரவல் சூழலில் நிகழ்ந்த கோரச் சம்பவங்கள்... திரைப்படமாக

வூஹானில், பிப்ரவரி மாதக் கிருமித்தொற்றுச் சூழலில் மருத்துவமனைகளில் நிகழ்ந்தவற்றை இரு சீனத் திரைப்படத் தயாரிப்பாளர்கள் காணொளியாகப் பதிவுசெய்திருக்கின்றனர்.

வாசிப்புநேரம் -

வூஹானில், பிப்ரவரி மாதக் கிருமித்தொற்றுச் சூழலில் மருத்துவமனைகளில் நிகழ்ந்தவற்றை இரு சீனத் திரைப்படத் தயாரிப்பாளர்கள் காணொளியாகப் பதிவுசெய்திருக்கின்றனர்.

பயந்துபோய் மருத்துவமனைக் கதவுகளைத் தட்டும் மக்கள்..... களைப்பில் மயங்கும் மருத்துவ ஊழியர்கள்....
இறக்கும் தருவாயில் இருக்கும் நோயாளிகளிடம் விடைபெறக் கெஞ்சும் உறவினர்கள்.....

இப்படி மனத்தை உலுக்கும் பல தருணங்கள் அதில் பதிவு செய்யப்பட்டுள்ளன.

பேசாமல், எந்தவித நேர்காணலும் இல்லாமல், இயல்பாக, உண்மை நிகழ்வுகளைச் சித்திரிக்கும்வண்ணம் அந்தக் காட்சிகள் எடுக்கப்பட்டுள்ளன.

தற்போது நியூயார்க் படத்தயாரிப்பாளர் ஹௌ வூ (Hao Wu) என்பவரால் அந்தக் காட்சிகள் ஒன்றிணைக்கப்பட்டுத் திரைப்படமாகத் தயாரிக்கப்பட்டுள்ளன.

"76 Days" என்பது திரைப்படத்தின் பெயர்.

சீனாவில் 76 நாள்களுக்கு நீட்டிக்கப்பட்ட முடக்கநிலையின் ஒரு பிரதிபலிப்பாக அது இருக்கும் என்று தயாரிப்பாளர்கள் கூறுகின்றனர்.

டொரொண்ட்டோ திரைப்பட விழாவில் அது வரும் திங்கட்கிழமையன்று (21 செப்டம்பர்) வெளியிடப்படும்.

கிருமித்தொற்றுச் சூழலில் முதலில் வூ, சீன அரசாங்கத்தின் மீது கோபமடைந்தார்.

அதன் பின்னர் மனிதர்கள் கிருமித்தொற்றுச் சூழலால் அனுபவிக்கும் சிரமங்களைக் கண்டறிய முற்பட்டார்.

பிறர்மீது பழி சுமத்தாமல், மக்கள் அனுபவித்த சிரமங்களை வெளிக்காட்டும் நோக்கத்தில் திரைப்படத்தை எடுத்ததாகச் சொன்னார் அவர்.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்