Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

வூஹானின் கிருமிப்பரவல் குறித்து செய்தி வெளியிட்ட மாதுக்கு 5 ஆண்டு வரையிலான சிறைத்தண்டனை விதிக்கப்படலாம்

சீனாவில், வூஹான் நகரில் ஏற்பட்ட கிருமிப்பரவல் குறித்து செய்தி வெளியிட்ட முன்னாள் வழக்குரைஞருக்கு 5 ஆண்டுகள் வரையிலான சிறைத்தண்டனை விதிக்கப்படலாம்.

வாசிப்புநேரம் -
வூஹானின் கிருமிப்பரவல் குறித்து செய்தி வெளியிட்ட மாதுக்கு 5 ஆண்டு வரையிலான சிறைத்தண்டனை விதிக்கப்படலாம்

(படம்: YouTube/ 张展)

சீனாவில், வூஹான் நகரில் ஏற்பட்ட கிருமிப்பரவல் குறித்து செய்தி வெளியிட்ட முன்னாள் வழக்குரைஞருக்கு 5 ஆண்டுகள் வரையிலான சிறைத்தண்டனை விதிக்கப்படலாம்.

அது குறித்து BBC செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.

37 வயது ஸாங் ஷான் (Zhang Zhan) மே மாதத்திலிருந்து சீனக் காவல்துறையால் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

ஜூன் 19-ஆம் தேதி அவர் முறையாகக் கைதுசெய்யப்பட்டதை அடுத்து, ஸாங் மீது கடந்த வெள்ளிக்கிழமை குற்றஞ்சாட்டப்பட்டது.

அவர் WeChat, Twitter, YouTube ஆகிய தளங்களில் பொய்த் தகவல் பரப்பியதாகவும், வெளிநாட்டு ஊடகங்களுடன் நேர்காணல் நடத்துவதற்கு இணக்கம் தெரிவித்ததாகவும் குற்றஞ்சாட்டப்பட்டது என BBC குறிப்பிட்டது.

ஸாங், தடுப்புக் காவலுக்கு உட்படுத்தப்படும் சுயேச்சை நிருபர்களைப் பற்றி செய்தி வெளியிட்டதாக Network of Chinese Human Rights Defenders என்ற அரசாங்கச் சார்பற்ற அமைப்பு தெரிவித்துள்ளது.

அதிகாரிகளைப் பொறுப்பேற்றுக்கொள்ளும்படி கோரும் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ஏற்படும் அச்சுறுத்தல் சம்பவங்களைப் பற்றியும் அவர் தகவல் வெளியிட்டதாகக் கூறப்பட்டது.

வூஹானில் ஏற்பட்ட கிருமிப்பரவலையொட்டி தகவல் வெளியிட்ட நிருபர்கள் குறைந்தது மூவர், பிப்ரவரி மாதத்தில் திடீரென்று காணாமல் போயினர்.

இதுவரை இரண்டு நிருபர்களின் இருப்பிடம் மட்டுமே தெரியவந்துள்ளது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்