Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

வூஹான் நிமோனியா தொற்று ஒரே கடலுணவுச் சந்தையுடன் தொடர்புடையது: உலகச் சுகாதார நிறுவனம்

சீனாவின் வூஹான் நகரில் ஏற்பட்டுள்ள நிமோனியா பரவல்,  ஹுவானான் (Huanan) கடலுணவுச் சந்தையுடன் மட்டுமே தொடர்புடையது என்று உலகச் சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. 

வாசிப்புநேரம் -
வூஹான் நிமோனியா தொற்று ஒரே கடலுணவுச் சந்தையுடன் தொடர்புடையது: உலகச் சுகாதார நிறுவனம்

(படம்: AFP/STR)

சீனாவின் வூஹான் நகரில் ஏற்பட்டுள்ள நிமோனியா பரவல், ஹுவானான் (Huanan) கடலுணவுச் சந்தையுடன் மட்டுமே தொடர்புடையது என்று உலகச் சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

நிமோனியா காய்ச்சல், வூஹான் நகருக்கு அப்பால் பரவவில்லை என்றும் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

வூஹான் நகரில் நிமோனியக் காய்ச்சலுக்கு ஆளான ஒருவர் மாண்டார். மேலும் நாற்பது பேர் அந்தக் காய்ச்சலால் அவதிப்படுகின்றனர்.

அவர்களில் பெரும்பாலோர் ஹுவானான் கடலுணவுச் சந்தையில் வேலை செய்தவர்கள், அல்லது அங்கு அடிக்கடி சென்று வருபவர்கள் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.

இம்மாதம் முதல் தேதியிலிருந்து Huanan கடலுணவுச் சந்தை மூடப்பட்டுள்ளது. நிமோனியா தொற்றுக்கு ஆளானவர்களோடு சுமார் 760 பேர் நெருங்கிய தொடர்பு வைத்திருந்தாகத் தெரியவந்துள்ளது.

சார்ஸ், மெர்ஸ் நோய்த் தொற்றுக்குக் காரணமாகும் கிருமியோடு தொடர்புடைய புதிய corona கிருமியே நிமோனியாத் தொற்றுக்குக் காரணம் என்று உலகச் சுகாதார நிறுவனம் சென்ற வாரம் தெரிவித்தது. 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்