Images
  • gggg
    (படம்: REUTERS/Jason Lee)

வூஹான் நகரில் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்தியிருக்கும் சீனா

சீனா, வூஹான் நகரில் மக்கள் நடமாட்டத்தை மேலும் இறுக்கமாக்கியுள்ளது. காய்ச்சல், சளி போன்ற நோய் அறிகுறிகள் இருப்போர் தங்கள் வட்டாரத்தைத் தாண்டி வேறு எந்த மருத்துவமனைகளுக்கும் செல்லக் கூடாது என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

நிமோனியா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு, கண்காணிக்கப்படவேண்டியவர்கள், மருந்தகத்தில் இருக்கவேண்டும் அல்லது அரசாங்கம் அமைத்துக்கொடுத்த தங்குமிடங்களில் இருக்கவேண்டும்.

வூஹானின் மத்திய பகுதியில் நோய்க்கிருமி தொற்றத் தொடங்கியதாக நம்பப்படும் காட்டு விலங்குகளுக்கான சந்தையைச் சுற்றியுள்ள குடியிருப்புப் பேட்டைகளை சில நாள்களுக்கு முன்னர் அதிகாரிகள் முற்றிலுமாக மூடினர்.

சென்ற மாதம் 23-ஆம் தேதி முதல் வூஹான் நகர் முடக்கப்பட்டுள்ளது. அந்நகரின் போக்குவரத்துத் தொடர்புகள் அனைத்தும் துண்டிக்கப்பட்டன.

நொவல் கொரோனா கிருமித்தொற்றுக்கு இதுவரை சீனாவில் 1,000க்கும் அதிகமானோர் பலியாகிவிட்டனர். 42,000க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டனர்.  

Top