Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

வூஹானிலிருந்து இதர பகுதிகளுக்குச் செல்லும் அனைத்துப் போக்குவரத்துச் சேவைகளும் நிறுத்தப்பட்டுள்ளன

வூஹான் நகரில் பரவி வரும் கொரோனா கிருமியைக் கட்டுப்படுத்த சீனா கடுமையான நடவடிக்கைகளை முடுக்கிவிட்டுள்ளது.

வாசிப்புநேரம் -
வூஹானிலிருந்து இதர பகுதிகளுக்குச் செல்லும் அனைத்துப் போக்குவரத்துச் சேவைகளும் நிறுத்தப்பட்டுள்ளன

(படம்: AFP/Noel Celis)

வூஹான் நகரில் பரவி வரும் கொரோனா கிருமியைக் கட்டுப்படுத்த சீனா கடுமையான நடவடிக்கைகளை முடுக்கிவிட்டுள்ளது.

11 மில்லியன் குடிமக்களைக் கொண்ட அந்த நகர், இன்று முதல் தனிமைப்படுத்தப்படும்.

இன்று காலை 10 மணி தொடங்கி விமானங்கள், ரயில்கள் என வூஹானிலிருந்து வரும் அனைத்து போக்குவரத்துச் சேவைகளும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படும் என்று சீனா அறிவித்துள்ளது.

தாய்லந்தில் புதிய கிருமியால் கூடுதலாக இரண்டு பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், ஹாங்காங்கிலும் மக்காவிலும் புதிய வகை கிருமியால் ஒருவராவது பாதிக்கப்பட்டிருப்பது உறுதிச் செய்யப்பட்டுள்ளது.

சீனாவுக்கு வெளியே 7 பேர் கொரோனா கிருமியால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கிருமிப் பரவலால் மாண்டோரின் எண்ணிக்கை 9லிருந்து 17க்கு உயர்ந்துள்ளது.

மாண்டோர் அனைவரும் வூஹானைத் தலைநகராகக் கொண்ட ஹூபெய் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள்.

அங்கு, 550க்கும் மேற்பட்டோர் கொரோனா கிருமியால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்