Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

சீனாவில் மேலும் நால்வருக்கு நிமோனியா தொற்று - மற்ற நாடுகளுக்கு நோய் பரவும் அச்சம் அதிகரிப்பு

சீனாவில் மேலும் நால்வருக்கு நிமோனியாக் காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. 

வாசிப்புநேரம் -
சீனாவில் மேலும் நால்வருக்கு நிமோனியா தொற்று - மற்ற நாடுகளுக்கு நோய் பரவும் அச்சம் அதிகரிப்பு

(படம்: AFP/Noel Celis)

சீனாவில் மேலும் நால்வருக்கு நிமோனியாக் காய்ச்சல் ஏற்பட்டுள்ளது.

அந்த நால்வரின் நிலை சீராக உள்ளது என்று வூஹான் நகரத்தின் சுகாதார அலுவலகம் கூறியது.

வூஹானில் புதிய Corona கிருமியால் நிமோனியா தொற்று தொடங்கியதாக நம்பப்படுகிறது.

நிமோனியா நோயால் பாதிக்கப்பட்ட ஒருவர் சென்ற வாரம் மாண்டார். அதனைத் தொடர்ந்து அந்த நான்கு சம்பவங்களும் பதிவாகியுள்ளன.

இதுவரை வூஹான் நகருக்குச் சென்ற சுமார் 50 பேர் நிமோனியா நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று கூறப்படுகிறது. இருப்பினும் அந்த நோய் பரவக்கூடும் என்று உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது.

அடுத்த வாரம் சீனப்புத்தாண்டை முன்னிட்டு சீனாவிலிருந்து சுமார் 1.4 பில்லியன் பேர் வெளிநாடுகளுக்குப் பயணம் மேற்கொள்வர் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. அதனால் மற்ற நாடுகளுக்கு நோய் பரவக்கூடும் என்ற அச்சம் எழுந்துள்ளது.
 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்