Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

சீனாவில் தொடர்ந்து அதிகரிக்கும் வூஹான் கிருமிப் பாதிப்பு

சீனாவில் தொடர்ந்து அதிகரிக்கும் வூஹான் கிருமிப் பாதிப்பு

வாசிப்புநேரம் -
சீனாவில் தொடர்ந்து அதிகரிக்கும் வூஹான் கிருமிப் பாதிப்பு

(படம்: Reuters/Jorge Silva)

சீனாவில் வூஹான் கிருமியால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 571 ஆக உயர்ந்துள்ளது.

கிருமித் தொற்றால் இதுவரை 17 பேர் மாண்டனர் என்று அதிகாரிகள் கூறியுள்ளனர்.

தற்போது வூஹானிலிருந்து இதர பகுதிகளுக்குச் செல்லும் அனைத்துப் போக்குவரத்துச் சேவைகளும் நிறுத்தப்பட்டுள்ளன.

11 மில்லியன் பேர் வசிக்கும் அந்த நகர், இன்று முதல் தனிமைப்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

சார்ஸ் வகையாக கருதப்படும் கொரோனா கிருமி சீனாவின் முக்கிய நகரங்களான பெய்ச்சிங், ஷாங்ஹாய் வட்டாரங்களிலும் பரவியுள்ளது.

மத்திய, தென் சீனப் பகுதியிலும் வூஹான் கிருமி பரவியுள்ளது.

கடந்த மாதம் 31ஆம் தேதி தொடங்கிய கிருமிப் பரவல் ஹாங்காங், மக்காவ், தைவான், ஜப்பான், தென் கொரியா, தாய்லந்து, அமெரிக்கா பகுதிகளிலும் பரவியுள்ளது.


 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்