Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

இரண்டாம் உலகப் போரில் ஜப்பான் சரணடைந்து இன்றுடன் 73 ஆண்டுகள் கழிந்துள்ளன

ஜப்பான், இரண்டாம் உலகப் போரில் சரணடைந்து இன்றுடன் 73 ஆண்டுகள் கழிந்துள்ளன.

வாசிப்புநேரம் -
இரண்டாம் உலகப் போரில் ஜப்பான் சரணடைந்து இன்றுடன் 73 ஆண்டுகள் கழிந்துள்ளன

(படம்: Reuters)

ஜப்பான், இரண்டாம் உலகப் போரில் சரணடைந்து இன்றுடன் 73 ஆண்டுகள் கழிந்துள்ளன.

போரில் மாண்ட சுமார் 3 மில்லியன் ஜப்பானியர்களுக்கான நினைவஞ்சலி நிகழ்ச்சிக்கு தோக்கியோவில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

நிகழ்ச்சியில் சுமார் 6ஆயிரம் பேர் கலந்துகொள்வர் என எதிர்பார்க்கப்பட்டது.

அடுத்த ஆண்டு அரியணை துறப்பதற்கு முன் இறுதி முறையாக 85 வயது பேரரசர் அக்கிஹிட்டோவும் அதில் கலந்துகொண்டார்.

அமைதி, ஜனநாயகம், சமரசம் முதலியவற்றுக்கான சின்னமாக ஜப்பானியப் பேரரசர் விளங்குகிறார்.

மாறாக, அவரது தந்தையான முன்னாள் பேரரசர் ஹிரோஹிட்டோவின் பேரில்தான் இரண்டாம் உலகப் போரில் ஜப்பான் களமிறங்கியது.

போரால் ஏற்பட்ட விளைவுகள் குறித்து வருந்துவதாகப் பேரரசர் அக்கிஹிட்டோ கூறினார்.

அத்தகைய அட்டூழியம் இனிமேல் நடக்காமல் இருக்கவேண்டும் எனத் தாம் விரும்புவதாய்ச் சொன்னார்.

போரில் மடிந்தவர்களுக்கு அனுதாபம் தெரிவித்த அவர், உலக அமைதிக்கும் நாட்டின் வளப்பத்திற்கும் வேண்டிக்கொள்வதாகச் சொன்னார்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்