Images
  • xi jinping (1)
    (படம்:  AFP)

சீனாவின் பொருளியல் வளர்ச்சியை நிலைநாட்ட முடியும்: சீன அதிபர்

COVID-19 கிருமித்தொற்றின் தாக்கத்தைக் குறைக்கமுடியும் என்றும், சீனாவின் பொருளியல் வளர்ச்சியை நிலைநாட்ட முடியும் என்றும் சீன அதிபர் சி சின்பிங் உறுதி அளித்துள்ளார்.

அவர், மலேசியப் பிரதமர் மகாதீர் முகமதுடன் நடத்திய தொலைபேசி உரையாடலின்போது அவ்வாறு கூறியதாகச் சீன அரசாங்க ஊடகம் தெரிவித்தது.

சீனா, கிருமிப்பரவலைக் கட்டுப்படுத்த கடுமையான நடவடிக்கைகளை எடுத்துள்ளதாகவும், சிகிச்சை முறைகளில் தொடர்ந்து முன்னேற்றம் கண்டு வருவதாகவும் திரு. சி கூறினார்.

COVID-19 கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள பொருளியலுக்கு ஆதரவளிக்க, சீனாவில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

சீனாவின் முதல் காலாண்டுப் பொருளியல் வளர்ச்சியில் மோசமான தாக்கம் இருக்கும் என்று முன்னுரைக்கப்பட்டுள்ளது.

Top