Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

பாகிஸ்தானுடனான காஷ்மீர்ப் பிரச்சினையிலிருந்து சீனா விலகியிருக்கவேண்டும் - இந்தியா எச்சரிக்கை

காஷ்மீர்ப் பிரச்சினையில் பாகிஸ்தானுடன் தொடரும் முரண்பாட்டிலிருந்து விலகியிருக்குமாறு, இந்தியா சீனாவை எச்சரித்துள்ளது.

வாசிப்புநேரம் -
பாகிஸ்தானுடனான காஷ்மீர்ப் பிரச்சினையிலிருந்து சீனா விலகியிருக்கவேண்டும் - இந்தியா எச்சரிக்கை

(படம்: AFP)

காஷ்மீர்ப் பிரச்சினையில் பாகிஸ்தானுடன் தொடரும் முரண்பாட்டிலிருந்து விலகியிருக்குமாறு, இந்தியா சீனாவை எச்சரித்துள்ளது.

காஷ்மீர் விவகாரத்தில் பாகிஸ்தானின் அடிப்படை நலன்களைப் பாதுகாக்க ஆதரவு வழங்கப்படும் என்று சீனா உறுதியளித்திருந்தது.

காஷ்மீர் விவகாரத்தை அணுக்கமாகக் கண்காணித்து வருவதாகவும் அது கூறியிருந்தது.

இந்நிலையில், காஷ்மீர் - தனது உள்நாட்டு விவகாரம் என்று இந்திய வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்தியா, சீனாவின் பொருளியல் ஆண்டுதோறும் 6 விழுக்காடு வளர்ச்சியடைந்து வருகின்றது.

இரு நாடுகளுக்கும் இடையே பொதுவான அம்சங்கள் இருக்கும் அதேவேளையில், முரண்பாடுகளுக்கும் குறைவில்லை.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும், சீன அதிபர் சி சின்பிங்கும் இன்று சென்னைக்கு அருகேயுள்ள மாமல்லபுரத்தில் சந்திக்கவுள்ளனர்.

அது இரு தலைவர்களுக்கும் இடையிலான இரண்டாவது அதிகாரபூர்வமற்ற சந்திப்பு.
 
விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்