Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

சீனா முன்னோக்கி மட்டுமே செல்லும் நிலையை எட்டிவிட்டது - சீன அதிபர் சி

சீன அதிபர்  சி சின்பிங், இனிமேல் தமது நாடு முன்னோக்கி மட்டுமே செல்லும் நிலையை எட்டியிருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

வாசிப்புநேரம் -
சீனா முன்னோக்கி மட்டுமே செல்லும் நிலையை எட்டிவிட்டது - சீன அதிபர் சி

சீன அதிபர் சி சின்பிங். படம்: Reuters/Jason Lee

சீன அதிபர்  சி சின்பிங், இனிமேல் தமது நாடு முன்னோக்கி மட்டுமே செல்லும் நிலையை எட்டியிருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

பெரிய நாடு என்னும் முறையில் அது உயர்வான இலக்குகளைக் கொண்டிருக்க வேண்டுமென்றார் அவர்.

சீனப் பொருளியல் தாராளமயமாகி, சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டதன் 40ஆம் ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில், மக்கள் மாமன்றத்தில் உரையாற்றியபோது திரு. சி அதனைத் தெரிவித்தார்.

உலக வர்த்தகத்துக்கு சீனா திறந்துவிடப்படுவதற்கான முயற்சிகளை பெய்ச்சிங் விரிவுபடுத்துமென்றும் அவர் சொன்னார்.

மேலும், முக்கியமான பொருளியல் சீர்திருத்த நடவடிக்கைகள் நடைமுறைப்படுத்தப்படுவதும் உறுதி செய்யப்படும் என்றார் அவர்.

பொருளியல் சீர்திருத்தங்கள் மூலமாக, உலகின் இரண்டாவது ஆகப் பெரிய பொருளியல் என்னும் நிலையை சீனா அடைந்திருக்கிறது.

வளரும் நாடுகளுக்கு, சீனா ஒரு முன்மாதிரியாக விளங்க முடியுமெனச் சீன அதிபர் கூறினார்.

நேற்று திரு.சி, ஹாங்காங், மக்காவ் ஆகியவற்றின் தலைவர்களைச் சீனாவிற்கு வரவேற்றார்.

ஒரு நாடு, இரண்டு முறைகள் கொள்கையைப் பாதுகாத்து வரும் அந்த இரு தலைவர்களைத் திரு.சி பாராட்டினார்.

சீனாவின் சீர்திருத்த முயற்சிகளில் ஹாங்காங்கும், மக்காவ்வும் ஈடு செய்ய முடியாத இடத்தை வகித்து வருவதாக அதிபர் சி கூறினார்.


விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்