Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

இந்தியப் பிரதமர் மோடியும், சீன அதிபர் சியும் சென்னையில் சந்திப்பு

தமிழகத் தலைநகர் சென்னையில், இந்த வார இறுதியில், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும், சீன அதிபர் சி சின்பிங்கும் (Xi Jinping) சந்திக்கவிருக்கின்றனர்.

வாசிப்புநேரம் -
இந்தியப் பிரதமர் மோடியும், சீன அதிபர் சியும் சென்னையில் சந்திப்பு

(படம்: REUTERS/Aly Song/Files)

தமிழகத் தலைநகர் சென்னையில், இந்த வார இறுதியில், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும், சீன அதிபர் சி சின்பிங்கும் (Xi Jinping) சந்திக்கவிருக்கின்றனர்.

இந்திய வெளியுறவு அமைச்சு அந்தத் தகவலை வெளியிட்டது.

இம்மாதம் 11, 12 ஆகிய தேதிகளில் இரு தலைவர்களும் சந்தித்துப் பேசுவர்.

சென்ற ஆண்டு இந்திய-சீன எல்லைப் பிரச்சினை குறித்து திரு. மோடியும், திரு. சியும் சீனாவின் வூஹான் (Wuhan) நகரில் பேச்சு நடத்தினர். இருதரப்பு உறவுகளை நிலைப்படுத்த அது உதவியது.

இருதரப்பு உறவுகளை மேம்படுத்தும் நோக்கில் இந்த வார இறுதிச் சந்திப்பு இடம்பெறுகிறது.

ஆகஸ்ட் மாதம் இந்தியா காஷ்மீரின் சிறப்பு அதிகாரத்தை ரத்துசெய்தது.

இந்தியாவின் நடவடிக்கைக்குப் பாகிஸ்தானும், அதன் நட்புநாடான சீனாவும் கண்டனம் தெரிவித்தன.

ஐக்கிய நாட்டு நிறுவனப் பாதுகாப்பு மன்றத்துக்கு அந்தப் பிரச்சினையை அவை எடுத்துச்சென்றன.

இந்நிலையில், சென்னை சந்திப்பு இந்தியாவுக்கும், சீனாவுக்கும் இடையில் அணுக்கமான பங்காளித்துவத்தை ஆழப்படுத்துவது குறித்துக் கலந்துரையாட வகைசெய்யும் என்று இந்திய வெளியுறவு அமைச்சு குறிப்பிட்டது.
 
விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்