Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

சில நாடுகள் வரையும் விதிமுறைகளை, ஏனைய நாடுகள் மீது வலுக்கட்டாயமாகத் திணிக்க முடியாது: சீனா

சீன அதிபர் சி சின்பிங் (Xi Jinping), சில நாடுகள் வரையும் விதிமுறைகளை, ஏனைய நாடுகள் மீது வலுக்கட்டாயமாகத் திணிக்க முடியாது எனக் கூறியுள்ளார்.

வாசிப்புநேரம் -

சீன அதிபர் சி சின்பிங் (Xi Jinping), சில நாடுகள் வரையும் விதிமுறைகளை, ஏனைய நாடுகள் மீது வலுக்கட்டாயமாகத் திணிக்க முடியாது எனக் கூறியுள்ளார்.

இன்று நடைபெற்ற வருடாந்திர Boao மாநாட்டில், அவர் முக்கிய உரையாற்றினார்.

மற்ற நாடுகளின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிடுவதை, நாடுகள், பொதுவில் தவிர்க்கவேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.

சீனா, எந்நிலையிலும், ஆதிக்கத்திலும் ஆயுதப் பந்தயத்திலும் ஈடுபடாது எனத் திரு. சி குறிப்பிட்டார்.

ஏனைய நாடுகளுடன் சுகாதார ஒத்துழைப்பை விரிவுபடுத்தவும், பெய்ச்சிங் முற்படுகிறது.

பருவநிலை மாற்றத்துக்கான முயற்சிகளை அதிகரிப்பதற்கான அவசியத்தையும் அதிபர் சி வலியுறுத்தினார்.

சீனாவின் 'இணைப்பும் பாதையும்' திட்டத்தின் மூலம் மில்லியன்கணக்கானோர் வறுமையிலிருந்து விடுபட முடியுமென, அவர் தெரிவித்தார்.

வெளிநாட்டு முதலீடுகளுக்கான தடைகளைக் குறைக்க, பெய்ச்சிங் தொடர்ந்து முற்படும் என்றும் திரு. சி கூறினார்.

உலகப் பொருளியல் மாநாட்டைப் போலவே, ஆசிய வட்டாரத்தில் வெளிநாட்டு முதலீட்டாளர்களை ஈர்க்க, சீனா நடத்தும் வருடாந்திரச் சந்திப்பாக Boao மாநாடு அமைகிறது.
 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்