Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

சீன அதிபர் சி சின்பிங் வட கொரியாவுக்கு 2 நாள் பயணம்

சீன அதிபர் சி சின்பிங், நாளை மறுநாள் வட கொரியாவுக்கு இரண்டுநாள் பயணம் மேற்கொள்ளவிருக்கிறார். 

வாசிப்புநேரம் -
சீன அதிபர் சி சின்பிங் வட கொரியாவுக்கு 2 நாள் பயணம்

( கோப்புப் படம் : AFP )

சீன அதிபர் சி சின்பிங், நாளை மறுநாள் வட கொரியாவுக்கு இரண்டுநாள் பயணம் மேற்கொள்ளவிருக்கிறார்.

சீனத் தலைவர் ஒருவர் பியோங்யாங் செல்லவிருப்பது, கடந்த 14 ஆண்டுகளில் இதுவே முதல்முறை.

வட கொரியத் தலைவர் கிம் ஜோங் உன் அழைப்பின்பேரில் அவர் அங்கு செல்கிறார்.

கொரியத் தீபகற்பத்தில் நிலவும் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண்பது குறித்து, இரு தலைவர்களும் தங்கள் சந்திப்பின்போது விவாதிப்பர் என சீன அரசாங்க ஊடகம் குறிப்பிட்டது.

தொடர்ந்து விதிக்கப்பட்டுவரும் அமெரிக்கத் தடைகளால், வட கொரியா பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அதிபர் சி பியோங்யாங் செல்கிறார்.

ஜப்பானில் அடுத்த வாரம் நடைபெறவுள்ள G20 உச்சநிலை மாநாட்டில், அமெரிக்க அதிபர் டிரம்ப்பும், சீன அதிபர் சியும் சந்தித்துப் பேசுவர் என எதிர்பார்க்கப்படும் நிலையில், இந்தத் தகவல் வெளியாகி இருக்கிறது.

கொரியத் தீபகற்பத்தை அணுவாயுதமற்ற வட்டாரமாக மாற்ற விரும்பும் அமெரிக்காவின் முயற்சியில், சீனா தவிர்க்கமுடியாத சக்தி என்பதை வலியுறுத்தும் நோக்கில், அண்மைப் பயணத்துக்குத் திட்டமிடப்பட்டிருக்கலாமென நிபுணர்கள் கருதுகின்றனர்.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்