Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

யுவான் நாணய மதிப்பு சரியான அளவில் உள்ளது – சீன மத்திய வங்கி

சீன மத்திய வங்கி, யுவான் நாணயத்தின் மதிப்பு சரியான அளவில் உள்ளதாகத் தெரிவித்துள்ளது.

வாசிப்புநேரம் -
யுவான் நாணய மதிப்பு சரியான அளவில் உள்ளது – சீன மத்திய வங்கி

(படம்: AFP/Fred DUFOUR))

(வாசிப்பு நேரம்: 1 நிமிடத்திற்குள்)

சீன மத்திய வங்கி, யுவான் நாணயத்தின் மதிப்பு சரியான அளவில் உள்ளதாகத் தெரிவித்துள்ளது.

ஆகவே, ஒழுங்கற்ற விகிதத்தில் மூலதனம் நாட்டை விட்டு வெளியேறும் சாத்தியம் குறைவே என்றது வங்கி.

சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் சில பொருள்களுக்கு அமெரிக்கா ஏற்கனவே வரி விதித்துள்ளது. இன்னும் எஞ்சிய இறக்குமதிப் பொருள்களுக்கும், அடுத்தமாதம் முதல் தேதியிலிருந்து கூடுதல் வரி விதிக்கப் போவதாக அதிபர் டிரம்ப் அண்மையில் மிரட்டியிருந்தார்.

அதனைத் தொடர்ந்து, யுவான் நாணயத்தின் மதிப்பு கிட்டத்தட்ட 2.4 விழுக்காடு குறைந்ததால், நாணய மதிப்பை உயர்த்த, சீன மக்கள் வங்கி முயன்றுவரும் அறிகுறிகள் தென்படுகின்றன.

சீனப் பொருளியலின் அடிப்படைகள், சந்தையின் தேவை விநியோகம் ஆகியவற்றுக்கு ஏற்ற வகையில், யுவான் நாணயத்தின் தற்போதைய பரிவர்த்தனை மதிப்பு உள்ளதாக மத்திய வங்கியின் அனைத்துலகத் துறைத் தலைவர் குறிப்பிட்டார்.

சீனா, நாணயப் பரிவர்த்தனையில் சூழ்ச்சி செய்வதாக வெளியான அமெரிக்க நிதியமைச்சின் குற்றச்சாட்டு, தம்மை அதிர்ச்சியில் ஆழ்த்தியதாக அவர் கூறினார்.

ஆனால், வாஷிங்டன் சுமத்தியுள்ள குற்றச்சாட்டின் காரணமாக உருவாகும் எப்படிப்பட்ட சூழலையும் சீனா சமாளித்து மீளுமென அவர் நம்பிக்கை தெரிவித்தார்.


விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்