Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல்

சாம்சுங்கிற்கு வந்த சோதனை!

முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான சாம்சுங் எலெக்ட்ரானிக்ஸின் விற்பனை சரிந்திருக்கிறது. நிறுவனம் அண்மையில் புகார்கள் வெளியாயின. 

வாசிப்புநேரம் -
சாம்சுங்கிற்கு வந்த சோதனை!

(படம்: Reuters)

முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான சாம்சுங் எலெக்ட்ரானிக்ஸின் விற்பனை சரிந்திருக்கிறது. நிறுவனம் அண்மையில் வெளியிட்ட கேலக்ஸி நோட் 7 கைபேசியின் மின்கலம் வெடிப்பதாக புகார்கள் வெளியாயின.

அதனை அடுத்து, நிறுவனத்தின் பங்குவிலைகள் குறைந்துள்ளன.
தரக் கட்டுப்பாட்டுச் சோதனைகளை மேற்கொண்டபிறகு கைபேசிகள் ஏற்றுமதி செய்யப்படும் என்று நிறுவனம் கூறியிருக்கிறது.

தரநிலைகளுக்கான சோதனையில் தவறினால், உலகின் முன்னணி கைபேசித் தயாரிப்பு நிறுவனமான சாம்சங்கிற்கு அது பலத்த பின்னடைவாக இருக்கும் என்கின்றனர் கவனிப்பாளர்கள்.

போட்டி நிறுவனமான ஆப்பிளின் iPhone 7 குறித்த அறிவிப்பு அடுத்த வாரம் வெளிவரவிருக்கிறது. அதனுடன் போட்டியிட்டு கைபேசிச் சந்தையின் பெரும்பகுதியைக் கைப்பற்ற எண்ணியிருந்தது சாம்சுங்.
 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்